டெல்லி: அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும் கோடிக்கணக்கானவர்களுக்கு தொடர்ந்து பலத்தை தருகிறது நம் தேசத்திற்காக அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று அவரது நினைவு நாளில் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1956ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி டெல்லியில் காலமானார்.
அவர் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் செய்த பணிகள் எண்ணில் அடங்காதவை அரசியல் அமைப்பு சட்டம் முதல், ரிசர்வ் வங்கி வரை இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. அத்துடன்அவரது நினைவு நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரை பற்றிய நினைவுகளை பகிர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட் பதிவில், நம் தேசத்திற்காக அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும் கோடிக்கணக்கானவர்களுக்கு தொடர்ந்து பலத்தைத் தருகிறது என்றார்அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும் கோடிக்கணக்கானவர்களுக்கு தொடர்ந்து பலத்தை தருகிறது. மோடிகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அம்பேத்கரின் பங்களிப்பை இன்று நாம் நினைவில் கொள்வோம். இந்தியாவை அனைத்து விதமான பாகுபாடுகளிலிருந்தும் விடுவிக்க உழைப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றார்