ஆப்டிகல் பைபர் மூலம் வீட்டிற்கு இனைய வசதி தொடங்கும் ஜியோ

fibernet

நமது வாழ்க்கையில் இணையம் பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நமக்கும் உலகத்திற்கும் உள்ள தொடர்பு எல்லாம் தற்போது இணையம் வழியாக நடக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிக வேகம், தரம் மற்றும் நம்பகம் மிகுந்த இனைய வசதியை கொடுப்பதில் ஆப்டிகல் பைபர் தொழில்நுட்பம் காய் கொடுக்கிறது.

ஒளி இழை வடம் எனப்படும் தொழிநுட்பம் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றம் மிகவும் வேகமாகவும், வினாடிக்கு அதிக தகவல்களை கடத்தவும், தொய்வு இல்லாமலும் இருக்கிறது. ஏற்கனவே 4G தொழிநுட்பம் மூலம் கைப்பேசி இனைய வசதியில் சேவையை அறிமுகப்படுத்தி செயல்படுத்திவரும் ஜியோ(JIO) தற்போது ஆப்டிகல் பைபர் மூலம் வீடுகளுக்கு இனைய சேவை வழங்கும் சேவையை வரும் ஆகஸ்ட் 15 முதல் தொடங்க விருக்கிறது.
மாதாந்திர கட்டணம் மற்றும் பிற தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please follow and like us:

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*