Monday, January 18, 2021

தமிழக வீரர் திரு.நடராஜனனுக்கு ஓ. பன்னீர்செல்வம், சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் வாழ்த்து.

இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.

Latest Posts

நடிகர் மன்சூர் அலிகான் மீது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார்.

அரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...

தமிழில் அசத்தலாக வர்ணணை செய்த அப்துல் ஜப்பார் காலமானார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...

அபயாவை கொலை செய்த பாதிரியாருக்கு 28 ஆண்டுக்கு பின் தண்டனை.

கேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு...

கடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்: வைகோ

கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்இது தொடர்பாக, வைகோ இன்று (டிச. 02) வெளியிட்ட அறிக்கை சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை 2013 ஆம் ஆண்டு முதல் முத்தையா மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக் கல்லூரியும். அவற்றுக்கு, மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையும், 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது.

தமிழக அரசே ஏற்று நடத்தி வருகின்றது அப்பல்கலைக்கழகத்துடன் இணைந்ததுதான் ராஜா இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அது கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றது. ஆனால் கல்விக் கட்டணம் முன்பு இருந்தபடியே, ரூ.5.44 லட்சம் என அறிவித்து இருக்கின்றார்கள்.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கின் மூலம், பிற தனியார் மருத்துவக் கல்லூரிகளை விடச் கூடுதலாக வாங்கிய கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில், இந்த ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4 லட்சம் என மாணவர் சேர்க்கைக் குறிப்பேட்டில் அரசுவெளியிட்டது. ஆனால், அதை ரூ.5.44 லட்சமாக உயர்த்தி12.11.2020 அன்று அரசு மீண்டும் அறிவித்துள்ளதுகட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாளாக 30.11.2020 என அறிவித்திருப்பது, கண்டனத்திற்குரியதுஅதேபோல், ஈரோடு மாவட்டம், பெருந்துறை மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்று நடத்தி வருகின்றது. அது தற்போது ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படுகின்றது. அங்கும் கல்விக் கட்டணம் ரூ.3.85 லட்சம் என அறிவித்திருக்கின்றார்கள்.

இக்கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர்இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும், ராஜா முத்தையா பல்மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்ற பிறகு, அவை அரசுமருத்துவக் கல்லூரிகளாக செயல்படுகின்றன. அவ்வாறுஇருக்கும் போது, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளில்வாங்குகின்ற கட்டணத்தைத்தான், இந்த இரண்டுகல்லூரிகளிலும் வாங்க வேண்டும்அதை விடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலான கட்டணத்தை வசூல் செய்வது சரி அல்ல.தமிழக அரசே, வசதி படைத்தோருக்காக, தனியாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும், ஒரு பல் மருத்துவக் கல்லூரியையும் நடத்துவது போல் இருக்கின்றது. இது சமூக நீதிக்கும், ஏழை – எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எதிரானது எனவே, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணமான ரூ.13 ஆயிரத்து 670 மட்டுமே, இந்த இரு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் வாங்க வேண்டும் கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு (பழைய பெயர் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி), அரசு பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமான ரூ.11 ஆயிரத்து 610 மட்டுமே வாங்க வேண்டும் இக்கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவம் / முதுநிலை பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும், இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் குறைக்க வேண்டும். கட்டணத்தைக் கட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் போக்கைக் கைவிட வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவை அரசே ஏற்றது போல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவையும் அரசே ஏற்க வேண்டும்.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தொழிற் கல்லூரிகளில் பயிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிட, தனி நிதியத்தை (முதலமைச்சர் நிவாரண நிதி போல்) அரசு உருவாக்கிட வேண்டும்போஸ்ட் மெட்ரிக்’ கல்வி உதவித் தொகையை முறையாக வழங்கிட வேண்டும். அதை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த உதவித் தொகையை பெறுவதற்கான வருமான வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து, ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும்தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளது; அவற்றை சரிபாதியாகக் குறைக்க வேண்டும்”.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்

Latest Posts

நடிகர் மன்சூர் அலிகான் மீது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார்.

அரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...

தமிழில் அசத்தலாக வர்ணணை செய்த அப்துல் ஜப்பார் காலமானார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...

அபயாவை கொலை செய்த பாதிரியாருக்கு 28 ஆண்டுக்கு பின் தண்டனை.

கேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு...

Don't Miss

பாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்!-இராமதாஸ்

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...

நெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்

கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.