Monday, January 18, 2021

தமிழக வீரர் திரு.நடராஜனனுக்கு ஓ. பன்னீர்செல்வம், சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் வாழ்த்து.

இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.

Latest Posts

நடிகர் மன்சூர் அலிகான் மீது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார்.

அரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...

தமிழில் அசத்தலாக வர்ணணை செய்த அப்துல் ஜப்பார் காலமானார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...

அபயாவை கொலை செய்த பாதிரியாருக்கு 28 ஆண்டுக்கு பின் தண்டனை.

கேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு...

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் இன்னும்நான் முதல்வராக இருந்திருப்பேன் காங்கிரஸுடன் சேர்ந்து நல்லபெயரை கெடுத்துக்கொண்டேன்: ஹெச்டி குமாரசாமி குற்றச்சாட்டு

பாஜகவுடன் நான் கூட்டணி வைத்திருந்தால் இன்னும் நான் முதல்வராக இருந்திருப்பேன். காங்கிரஸுடன் கூட்டணி வைத்து 12 ஆண்டுகளாக நான் காப்பாற்றிய என் நல்ல பெயரைக் கெடுத்துக் கொண்டேன் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான ஹெச்டி குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தலில் எதிர்துருவங்களாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சியில் அமர்ந்தன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்டி குமாரசாமி முதல்வராக கடந்த 2018 மே 23 முதல் 2019 ஜூலை 23ம் தேதிவரை இருந்தார்அதன்பின் கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பம், எம்எல்ஏக்கள் விலகல் போன்றவற்றால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்ததுஇந்த கூட்டணி ஆட்சி முறிவுக்குப்பின்பும் குமாரசாமிக்கும் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சித்தராமையாவுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இரு தலைவர்களும் வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்துக் கொள்கின்றனர்நாங்கள் காங்கிரஸ் கட்சியின் சதி வலையில் வீழ்ந்துவிட்டோம். சித்தராமையா எனக்கும், எங்கள் கட்சிக்கும் துரோகம் செய்துவிட்டார். சித்தராமையா தொடர்ந்து எங்கள் மீது குற்றச்சாட்டு கூறிவந்ததே, எங்கள் ஆட்சி கவிழக் காரணமாக அமைந்ததுமதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி குறித்து சித்தராமையா தொடர்ந்து பேசுவது தார்மீக ரீதியில் சரியானது அல்ல எங்களைப் பற்றி சிந்திப்பதற்கு பதிலாக, தங்கள் கட்சி குறித்து பேச வேண்டும். என்னை பலமுறை அசிங்கப்படுத்த சித்தராமையாக முயன்றுள்ளார்கடந்த 2006-07ல் நான் முதல்வராக இருந்தபோது, மக்களிடம் நல்லபெயரை ஈட்டியிருந்தேன். கடந்த 12 ஆண்டுகளான் சம்பாதித்த நல்லபெயரை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து கெடுத்துக் கொண்டேன்பாஜகவுடன் நாங்கள் நல்ல உறவு வைத்திருந்தால், இந்நேரம் வரை நான்தான் மாநிலத்தில் முதல்வராக இருந்திருப்பேன் 2018-ல் காங்கிரஸ் கட்சி எங்களை வேதனைப்படுத்தியதை ஒப்பிடும்போது, கடந்த 20008ல் பாஜக எங்களைக் காயப்படுத்தியது குறைவுதான்என் தந்தையும், கட்சியின் தலைவருமான தேவகவுடாவின் அறிவுரையால்தான் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தோம். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கக் கூடாது. எங்களை பாஜகவின் பி டீம் என்று விமர்சித்தவர்களுடனே கூட்டணி வைத்தோம்.இப்போது எங்கள் கட்சி பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது, பலவீனங்களைச் சந்தித்துள்ளோம். கடந்த 3 தேர்தலில் 30 முதல் 40 இடங்களை தனித்து வென்ற எங்கள் கட்சி தற்போது பலவீனமாக இருக்கிறது. எங்கள் கட்சி பலவீனமடையவும், என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படவும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததுதான்சித்தராமையா பதில்குமாரசாமியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா பதில் அளித்து பெலகாவியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘ அரசியல் லாபத்துக்காக எப்போதும் குமாரசாமி பொய்களைப் பேசுவார். அவரின் வார்த்தையில் உண்மை இருக்காது. கண்ணீர் என்பது குமாரசாமி குடும்பத்தாரின் மிகப்பெரிய ஆயுதம். அவர்களின் கட்சி 37 இடங்களில் வென்றது, காங்கிரஸ் 80 இடங்களில் வென்றது. இருந்தும் அவரைத்தான் எங்கள் கட்சி முதல்வராக்கியது குமாரசாமிக்கு எப்போதும் நல்ல எண்ணம் கிடையாது’ எனத் தெரிவித்தார்காங்கிரஸ் மழுப்பல்காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சதீஸ் ஜர்கிகோலி கூறுகையில் இப்போது மாநிலத்தில் ஜேடியு, காங்கிரஸ் கட்சி இடையே எந்த கூட்டணியும் இல்லை. கதை முடிந்துவிட்டது இருவரும் தனித்தனிக் கட்சிகள் இப்போது எங்கள் கட்சியைப் பலப்படுத்த விரும்புகிறோம். ஜேடியு கட்சியின் கருத்துக்கு பதில் அளிக்க விரும்பவில்லை ‘ எனத் தெரிவித்தார்

Latest Posts

நடிகர் மன்சூர் அலிகான் மீது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார்.

அரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...

தமிழில் அசத்தலாக வர்ணணை செய்த அப்துல் ஜப்பார் காலமானார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...

அபயாவை கொலை செய்த பாதிரியாருக்கு 28 ஆண்டுக்கு பின் தண்டனை.

கேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு...

Don't Miss

பாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்!-இராமதாஸ்

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...

நெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்

கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.