உ.பி.,யில் இரு லாரிகள் மோதிக்கொண்டதில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பலி

Uttar Pradesh

ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள்களை ஏற்றி கொண்டு உத்தரப்பிரதேசம் சென்ற லாரி, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதால் 24 புலம்பெயர் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்தஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை தங்கள் மாநிலத்திற்கு அழைத்து செல்ல மத்திய அரசு சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஆனாலும், சில தொழிலாளர்கள் நடந்தோ, லாரியில் ஏறியோ பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, லாரியில் மொத்தமாக பயணித்தனர். அவர்களை ஏற்றி வந்த லாரி, உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆரையா பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*