2 மாதத்தில், 6 லட்சம் கோடி ரூபாய் கடன் : நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman

‘பொதுத் துறை வங்கிகளின் மூலமாக கடந்த இரண்டு மாதத்தில், 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு: கடந்த மார்ச், 1ம் தேதி முதல், மே, 8ம் தேதி வரை மட்டும், பொதுத் துறை வங்கிகளின் மூலமாக 5.95 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், சில்லரை வர்த்தகம், விவசாயம், கனரக நிறுவனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த, 46.74 லட்சம் கணக்குகளுக்கு, பொதுத் துறை வங்கிகள், 5.95 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன.

வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகளிடமிருந்து, 1.18 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளன. என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*