சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தக் ஷா மாணவர் குழு உலகின் முதல் முறையாக ஆள் இல்லாமல் இயங்கும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
இந்த தக் ஷா மாணவர் குழுவிற்கு நடிகர் அஜித்குமார் தகுந்த முறையில் தொழில்நுட்ப ஆலோசனையை வழங்கி வருகின்றார். ஆலோசனைய மேலும் இக்குழு ஒரு சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார்கள்.
சிறப்பம்சங்கள்:
மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க கூடிய வகையில் தரமானதாகவும், உறுதியானதாகவும் வடிமமைத்து உள்ளனர். மேலும் இந்த குட்டி ஹெலிகாப்டர் 15 கிலோ எடையை தூக்கி கொண்டு பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
பயன்பாடு:
இந்த ஹெலிகாப்டர் சென்னையில் இருந்து வேலூர் வரை சென்று திரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது உடல் உறுப்புகளை எளிதாக பாதுகாப்பு பெட்டியில் வைத்து கொண்டுவரும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படும்.
அரசியல் நோக்கி வரும் நடிகர்களுக்கிடையே அறிவியல் நோக்கி நகரும் நடிகர் அஜீத்குமார் செயல் பாராட்டுக்குரியது.
ஒரு படம் இயக்கி அல்லது நடித்துவிட்டு அரசியல் பேசும் சினிமாகாரர் போல் இல்லாமல் நடிகர் அஜித்குமார் வித்தியாசம் தான்… இதனால் தான் இவருடைய ரசிகர்கள் இவரை “தல” அழைக்கிறார்கள் போலும்.