பிரபல சின்னத்திரை நகைச்சுவைக் கலைஞர் வடிவேல் பாலாஜி இன்று உயிரிழந்துள்ளார், அவருக்கு வயது 45.
“கலக்கப் போவது யார்”, “அது இது எது”உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. திரைப்படங்களிலும் காமெடி நடிகராகவும் நடித்து வந்த வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு பரிசோதனையில் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டது உறுதியானது.
இந்த நிலையில் சிகிச்சைக்கு அவரிடம் பணம் இல்லாத காரணத்தால் அரசு ராஜூவ்காந்தி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.