நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளிக்கப்பட்ட புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமியும் நெருங்கி இருக்கும் புகைப்படங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக விஜயலட்சுமி கூறி வந்தார். இருப்பினும், தொடர்ந்து அவர் சீமானை கடுமையாக விமர்சித்து வந்தார்.
அதேபோல, சீமானும், அவரது ஆதரவாளர்களும் விஜயலட்சுமியை கடுமையாக தாக்கி பேசி வந்தனர்.
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி சென்னை காவல் ஆணையத்தில் விஜயலட்சுமி புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், சீமானும், அவரது ஆதரவாளர்களும் கட்சி மேடைகளில் தன்னை பற்றி அவதூறு பேசி வருவதாகவும், இதனால், மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். எனவே, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
ஆனால், கடந்த நான்கு மாதங்களாக சீமான் மீது எந்தவிதமான நடவடிக்கையும் தமிழக போலீசார் எடுக்காத நிலையில், இதனால் விரக்தியடைந்த நடிகை விஜயலட்சுமி, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், இதுதான் எனது கடைசி வீடியோ எனக் கூறிய அவர், தனது சாவுக்கு காரணமாக சீமானை கைது செய்ய வேண்டும், முன்ஜாமீனுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது எனக் கூறியிருந்தார்.
இவரது இந்த வீடியோவை பார்த்து தகவலறிந்த போலீசார், உடனடியாக விஜயலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நடிகை விஜயலட்சுமி சென்றுள்ள நிலையில், சீமான் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டக் கூடாது என்றும், விரைவில் அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நெட்டிசன்கள் முன் வைத்து வருகின்றனர்.