கம்யூனிஸ்ட்களால் கொல்லப்பட்ட ஆர்ஸ்ஸ் தொண்டர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க செல்லும் பாஜக தலைவர்

வரும் 27 ஆம் தேதி கேரள முதலமைச்சரின் சொந்த ஊரான பினராயிக்கு பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா செல்கிறார். அரசியல் கட்சிகள் இடையிலான மோதலில் உயிரிழந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களான உத்தமன் மற்றும் அவரது மகன் ரமித் ஆகியோரின் வீட்டிற்கு சென்று அமித் ஷா ஆறுதல் கூறுகிறார்.

கன்னூர் மாவட்டத்திற்கு செல்லும் அவர்,  மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தையும் திறந்து வைக்க உள்ளார். அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கன்னூர் மாவட்டத்தில், அமித்ஷா வருகை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அரசியல் படுகொலை என்பது எல்லா மாநிலங்களில் நடக்கக்கூடியது. ஆனால் அது அரிதாக நடக்கும். இதற்கு விதிவிலக்கு கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்கள். கம்யூனிஸ்டுகளின் அரசியலில் மாற்று கட்சியினரை கொலை செய்வதுஎன்பது சைவ சாதாரணம். கேரளாவில் கம்யூனிச வெறியர்களால் கொல்லப்பட்ட RSS தொண்டர்கள் எண்ணிலடங்காதவர்கள். கம்யூனிஸ்ட்கள் ஆளும் ஒரே மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*