சென்னை: பெரம்பூரில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக மாபெரும் பேரணி

சென்னை: சென்னை பெரம்பூர் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக திருவாங்கூர் தேவசம் போர்டு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும்.

ayyappa-devotees-protest-all-womens-entry- against-Supreme Court order

 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எதிரான தீர்ப்பை உச்சநீதி மன்றம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும்.

கேரளா அரசாங்கம் ஆனது உடனடியாக சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் அவசர சட்டம் இயற்றி ஸ்ரீ ஐயப்பனின் பிரம்மசரியம் காக்கப்பட வேண்டும்.

பேரணி தொடக்கம்:

ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தமார்கள் கையில் அகல்விளக்கு ஏந்தியபடி, சரண கோஷங்கள் முழங்க மாபெரும் எழுச்சி பேரணியாக கலந்துகொண்டார்கள். பேரணியானது பெரம்பூர் முரசொலி பூங்காவில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர் ஐயப்பன் கோவிலை 7.30 மணியளவில் சென்றடைந்தது.


பெரம்பூர் ஐயப்பன் கோவில் சென்றடைத்ததும் பெண் ஐயப்ப பக்தமார்கள் தேங்காய் உடைத்து 10 வயதுக்கு மேல் 50வயதுகுக்குள் உள்ள பெண்கள் நாங்கள் யாரும் சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு செல்ல மாட்டோம் என்று சத்திய பிரமாணம் செய்தனர்.

பல ஹிந்து இயக்கங்கள் ஒன்றிணைந்து இந்த மாபெரும் பேரணியை ஒருங்கிணைத்து செய்திருந்தார்கள்.

ஓம் சாமியே சரணம் ஐயப்பா.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*