கொடைக்கானலில் நடைபெற்ற சபரிமலை அய்யப்ப குருசாமிகள் – பக்தர்கள் வழிபாடு – பஜனை – பாத பூஜை

கொடைக்கானலில் 7.12.2018 அன்று நடைபெற்ற சபரிமலை அய்யப்ப குருசாமிகள் – பக்தர்கள் வழிபாடு – பஜனை – பாத பூஜை – வெடி வழிபாடு – 18 படி பூஜை -அன்னதானம் என சிறப்பாக நடைபெற்றது .

1. அய்யப்ப பக்தர்கள் – குருசாமிகள் யாரும் இனிமேல் ஐயப்ப பஜனையில் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா என்று சொல்ல மாட்டோம் என தீர்மானிக்கப்பட்டது.

2. மதநல்லிணக்கம் என்று சொல்லி தவறான புனைவுகதைப் பரப்பி சபரிமலையில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள வாபர் சமாதி தரிசனம் செய்யக் கூடிய எந்த ஐயப்ப சாமியும் இனி மேல் சமாதிக்கு சென்று வழிபாடு செய்ய மாட்டோம்.

” வாபர் சமாதி புறக்கணிப்பு செய்வோம்”

“அய்யப்பன் உள்ளிட்ட இந்து தெய்வங்களைமட்டும் தரிசனம் ” செய்வோம்
எனத் தீர்மானிக்கப்பட்டது.

3. சரணம் கோஷம் முழங்கினால் மோட்சம் கிட்டும் என்ற நிலை மாறி சரணகோஷம் முழங்கினால்
“கேஸ்-வழக்கு “கிட்டுகிறது .

இந்த நிலையை மாற்ற இருமுடி சுமந்து ஐயப்பனை மட்டும் தரிசனம் செய்வோம். தேவஸ்தானத்தில் இருக்கக்கூடிய உண்டியலில் காசு போட மாட்டோம் காணிக்கை செலுத்த மாட்டோம் என தீர்மானிக்கப்பட்டது.

4. சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட கூடாது . மத்திய அரசு சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும் என்ற கோரிக்கையை மையபடுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி மேதகு ஆளுநர் வழியாக பாரத நாட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது என தீர்மானிக்கப்பட்டது .
விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த, பங்கேற்ற அனைத்து அய்யப்ப பக்தர்களுக்கும் , நிர்வாகிகளுக்கும்
வாழ்த்துக்களும் , பாராட்டுகளும் ….

“வாபர் சமாதி வழிபாடு புறக்கணிப்பு
பக்தி போராட்ட தீ
திசைகள் எட்டும் பரவட்டும்
திருப்பு முனை உண்டாகட்டும் ”

இராம. இரவிக்குமார்

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*