மதம் மாறி போகும் திருவிளக்குகள் திருச்சிலுவை “விளக்கு – ஆகிறது இந்துக்களே உஷார்!!!

ஆசை வார்த்தை கூறி ,
மோசடியாக மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவனுடைய ஒவ்வொரு முயற்சியும் இந்துக்களின் நம்பிக்கை பண்பாடு வழிபாட்டு முறைகளை எல்லாம் கிறிஸ்தவ மயமாக மாற்றக்கூடிய வேலையை நெடுநாள் திட்டமாக கிறிஸ்தவர்கள் செய்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

தமிழ் கடவுள் முருகப் பெருமான்
கையில் இருக்கக்கூடிய வேலாயுதத்தை இயேசுவின் கையில் கொடுத்து படம் வெளியிட்டார்கள் .

புனித தலங்களுக்கு சென்று வருகின்ற பொழுது தீர்த்தங்கள் செம்பு குடங்களில் அடைத்து விற்கப்படும் ,

அதுபோல இயேசுவின் தீர்த்தம் விற்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

பழனி பஞ்சாமிர்தம் பிரசாதம் போல கிறிஸ்தவ சபைகளிலும் பஞ்சாமிர்தம் விற்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்துக்கள் அணியக்கூடிய ருத்ராட்ச மாலையில் சிலுவையை மாட்டி கிறிஸ்தவ மயமாக்கி இருக்கிறார்கள்.

பழனிக்கு பாதயாத்திரை செல்வது போல கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை தொடங்கினார்கள்.

இந்துக் கோயில்களில் கொடிமரம் (துவஜஸ்தம்பம்) இருப்பது போல,
எல்லா கிறிஸ்தவ சர்ச்சுகளிலும் கொடிமரம் நிறுவியிருக்கிறார்கள்.

சமீபத்தில் பொங்கல் பண்டிகையை கிறிஸ்தவ மயமாக்க முயற்சி அனைத்து சபைகளிலும் பொங்கல் கொண்டாடினார்கள் .

தற்போது இந்துக்கள் திருவிளக்கு பூஜை நடத்துவதற்கு பயன்படக்கூடிய மங்களப் பொருளாக இருக்கக்கூடிய குத்துவிளக்கை ,
திருவிளக்கை மதம் மாற்றி
அதில் இருக்கக்கூடிய அன்னப்பறவைக்கு பதிலாக சிலுவையை வைத்து திருவிளக்கை மகாலட்சுமி விளக்கை” திருச்சிலுவை ” விளக்காக மாற்றியிருக்கிறார்கள்.

விரைவில் நந்தியம்பெருமான் இருக்கக்கூடிய கோயில் மணியில் சிலுவையை மேலே வைத்து ,
இது “பூசை மணி சூசை மணி ” என்று ஏதாவது பெயர் வைத்து சர்ச்சுகளில் மணி அடித்து வழிபாடு செய்வார்கள்.

கோவில் கொடி மரங்களில் கொடி ஏற்றும்போது வேப்பிலை வைத்து கொடி ஏற்றுகிறார்கள் நான் காவி உடை அணிந்து செல்வது போல கிறிஸ்தவர்களும் காவி உடை தரித்து ஆரம்பித்துவிட்டார்கள்.

சபரிமலைக்கு இருமுடிக்கட்டு செல்வதுபோல
நாளை சகாயமேரிக்கு
இருமுடி கட்டி செல்ல தொடங்கிவிடுவார்கள்.

கிறிஸ்தவ சகோதரர்களே இந்துக்கள் வழிபாட்டு முறை தங்களுக்கு பிடித்து இருக்குமேயானால் நீங்கள் தாய் சமயமான இந்து சமயத்திற்கு மீண்டு வாருங்கள்.

இல்லை என்று சொன்னால் இயேசு நாதரை இந்துவிற்கு தாய் சமயம் திருப்பி விடுங்கள்.

அதை விட்டுவிட்டு இந்த மண்ணின் மரபுகளை களவாடக் கூடிய வேலையை செய்வது கர்த்தருக்கு விரோதம் இல்லையா?

அல்லேலூயா ஒலிக்கும் இடங்களில் ஒலிக்கச் செய்வோம் பிறமதம் சென்றவர்களை தாய் சமயம் திரும்பச் செய்வோம்.

இராம. இரவிக்குமார்
மாநில பொதுச் செயலாளர்
இந்து மக்கள் கட்சி தமிழகம்

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*