Monday, August 10, 2020

ஐ.எஸ்.ஐ.எஸ். பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் கேரளா, கர்நாடகாவில் தஞ்சம் – ஐ.நா. பகீர் அறிக்கை.

அல் கொய்தா இந்திய துணைக்கண்டம் பயங்கரவாத அமைப்பு (AQIS) இந்தியாவில் தனது பயங்கரவாத தாக்குதலை நடத்த  ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய “ஹிந்த் விலாயத்” அமைப்பை சேர்ந்த 180 முதல் 200...

Latest Posts

கோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்

நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...

சென்னை கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து: எச்சரிக்கும் ராமதாஸ்

சென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள கிடங்கில் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேடை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்...

ஸ்ரீ ராமர் கோவிலின் மாதிரி அமைப்பு படங்களை இங்கே பார்க்கலாம்.

ஸ்ரீ ராமன் கோவில் மொத்தம் இரண்டு தளங்கள். 270 அடி நீளம், 140 அடி அகலம், 128 அடி உயரம். உள்ளே செல்ல பிரமாண்டமான ஐந்து வாசல்கள். கோயில் முழுக்க...

மதுரையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு – CCTV காட்சிகள்

மதுரையில் பட்டப்பகலில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சைக்கிளில் வரும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்த மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்...

தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரத்தை தளர்த்தக்கோரி இந்து மக்கள் கட்சியின் சார்பாக ராம ரவிக்குமார் தமிழக முதல்வருக்கு கோரிக்கை புகார் மனு

அனுப்புனர்
ராம ரவிக்குமார்
மாநில பொதுசெயலாளர்
இந்து மக்கள் கட்சி தமிழகம்
AE 89 ஆறாவது தெரு , சாந்தி காலனி அண்ணா நகர் சென்னை-40
86430_81430
9655365696

பெறுதல்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் சென்னை

பொருள்
இந்துக்கள் பண்டிகையான தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது இரவு 8 மணி முதல் 10 மணி வரை என்று விதிக்கப்பட்ட நீதிமன்ற நேரக்கட்டுப்பாடு தளர்த்தக்கோரியும் மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்ற தலையீடுகளை தடுக்கக் கோரியும் இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் கோரிக்கை புகார் மனு

ஐயா வணக்கம்.

அதர்மம் அழித்து , தர்மம் காத்திட நரகாசுரனை வென்று கண்ணபிரான் வெற்றி கண்ட நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவது என்பது தமிழர்களின் பாரம்பரிய மரபு .

இந்த தீபாவளிப் பண்டிகை .
தீபாவளி அன்று குடும்பத்தில் உள்ள அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புனித நீராடி, புத்தாடை அணிந்து , பட்டாசு வெடித்து, மகிழ்ச்சியோடு கொண்டாடுவது என்பது பாரம்பரியமாக இருந்து வரக்கூடிய மரபு.

இந்த மரபை அழிக்கவேண்டும்; சிதைக்க வேண்டும், என்ற கெட்ட உள்நோக்கத்தோடு பல வெளிநாட்டு சக்திகள் துணையோடு புகையில்லா தீபாவளி, சத்தமில்லா தீபாவளி என்று பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள் .

இப்படி செய்கின்ற காரணத்தினால் சிவகாசியில் பட்டாசு தொழிலால் பயன்படக்கூடிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, என்பது மட்டுமல்ல இந்திய பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.

ஆகவே தொழிலாளர் வாழ்வை காப்பதற்கும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், பட்டாசு தொழில் அழிந்துவிடாமல் காப்பதற்கும, சீனாவில் இருந்து வரக்கூடிய பட்டாசுகளை தடுக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை.

அதுமட்டுமல்லாது பட்டாசு வெடிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றமானது இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என நேரக் கட்டுப்பாடு விதித்து இருக்கிறது .

இது முழுக்க முழுக்க இந்து-விரோத தன்மையை காட்டுகிறது.
நீதிமன்ற உத்தரவு என்பது பல்வேறு நேரங்களில் இந்துக்களுடைய வழிபாட்டு முறையை சிதைத்து ,முடக்க வேண்டும் என்பதாகவே அமைந்திருக்கிறது.

இது கடந்த கால வரலாறு .

உதாரணமாக பூசணிக்காய் உடைக்கக்கூடாது, ஆயுத பூஜை கொண்டாடவேண்டாம், பிள்ளையார் சதுர்த்தி விசர்ஜனம் செய்ய 24 கட்டுப்பாடுகள், இதன் தொடர்ச்சியாக தற்போது தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க இந்த நேரக் கட்டுப்பாடு இது இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் தேவையற்ற தலையிடுவதாக இந்துக்கள் எண்ணுகிறார்கள்.

மக்களின் உணர்வுகளை நீதிமன்றங்களில் பிரதிபலிக்காமல் அரசு வழக்கறிஞர்கள் இருப்பது வேதனையளிக்கிறது என்பது மட்டும் அல்ல வெறுப்பை உண்டாக்குகிறது.

இது போன்ற கட்டுப்பாடுகள் விதிப்பது நாளை தீபாவளி அன்று இந்த உடைதான் போட வேண்டும் இந்த உணவுதான் சாப்பிட வேண்டும் என நீதிமன்ற வழிகாட்டுதல் கூட நாளை வரலாம் என இந்துக்கள் அச்சப்படுகிறார்கள்.

ஆகவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு நீதிமன்றங்கள் மதரீதியான வழிபாட்டு உரிமைகளில் தலையிட வேண்டாம் .
மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டாம் என தமிழக அரசு ஒரு சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் இந்த கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கிறோம்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தேசப் பணியில்
ராம ரவிக்குமார்
சென்னை
29.10.2018

Latest Posts

கோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்

நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...

சென்னை கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து: எச்சரிக்கும் ராமதாஸ்

சென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள கிடங்கில் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேடை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்...

ஸ்ரீ ராமர் கோவிலின் மாதிரி அமைப்பு படங்களை இங்கே பார்க்கலாம்.

ஸ்ரீ ராமன் கோவில் மொத்தம் இரண்டு தளங்கள். 270 அடி நீளம், 140 அடி அகலம், 128 அடி உயரம். உள்ளே செல்ல பிரமாண்டமான ஐந்து வாசல்கள். கோயில் முழுக்க...

மதுரையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு – CCTV காட்சிகள்

மதுரையில் பட்டப்பகலில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சைக்கிளில் வரும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்த மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்...

Don't Miss

பின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...

முசிறி அருகே கண்டெடுக்கப்பட்ட பழமைவாய்ந்த பீரங்கி குண்டு!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மண்பறை என்ற கிராமத்தில், மிகப்பழமை வாய்ந்த பீரங்கி குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 7 கிலோ எடை கொண்ட கல்லாலான உருண்டை...

scooty-யில் வந்து Royal Enfield புல்லட்டை ஆட்டைய போட்ட பலே திருடர்கள்!

source: Polimer News சென்னை வேளச்சேரியில் புதிய ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி...

பற்றி எரிந்த தீ – இரு குழந்தைகளை வெளியே தள்ளிவிட்டு காப்பாற்றிய தாய்

பிரான்ஸ் நாட்டில் தீப்பிடித்த 40 அடி உயர வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட இரு குழந்தைகளையும் அக்கம்பக்கத்தினர் காயமின்றி காப்பாற்றினர் கிரனோபிள் எனும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில்...

துப்பாக்கியிலிருந்து குண்டுமழை பொழியாமல் பூமழையா பொழியும்?: அன்றைய முதல்வர் கருணாநிதி

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. எஸ். இன்பதுரை 1970-ஆம் மின்கட்டண உயர்வு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 3 பேர்சுடப்பட்டு இறந்ததற்கு அன்றைய முதல்வர் கருணாநிதி கொடுத்த விளக்கம்...