டெல்லி ஷாஹீன்பாக் போராட்டத்துக்கு நிதி கொடுத்த பி.எப்.ஐ, தலைவர், செயலாளர் கைது

PFI

டில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக ஷாஹீன் பாக்கில் நடந்த போராட்ட குழுவுக்கு நிதி உதவி செய்த புகாரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.,) தலைவர், செயலாளரை கைது செய்தது டெல்லி போலீஸ்.

‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டில்லி ஷாஹீன் பாக்கில் பல நாட்களாக நடந்து வந்தது. இந்த போராட்டம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பதாக வந்த புகாரை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரிடம் பேச்சு நடத்த, உச்சநீதிமன்றத்தால் சமரசக் குழு நியமிக்கப்பட்டது. சமரச குழுவில் இடம்பெற்ற மூத்த வழக்கறிஞர்கள் சாதனா ராமச்சந்திரன், சஞ்சய் ஹெக்டே ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினார்கள்.

இதற்கிடையே, ஷாஹீன் பாக் போராட்டத்துக்கு சிலர் நிதி உதவி அளிப்பதாக டில்லி போலீசுக்கு புகார் வந்தது. இதனையடுத்து நடந்த விசாரணையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.,) தலைவர் பர்வேஸ் மற்றும் செயலாளர் இலியாஸ் ஆகியோர் டில்லி போலீசார் கைது செய்யப்பட்டனர்.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*