Saturday, August 15, 2020

சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? விரக்தியில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளிக்கப்பட்ட புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னையில் சிக்னல் கம்பம் : வாகன ஓட்டிகள் வரவேற்பு!!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சென்னை காமராஜர் சாலையில் சோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது சென்னை போக்குவரத்து துறை. தமிழகத்தின் தலைநகரான...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

இயேசு வந்து Exam எழுதுவாரா ? மோகன் சி லாசரஸ்க்கு இராம ரவிக்குமார் கேள்வி?

செய்தியும் ஜெபமும்
மோகன் சி லாசரஸ்
என்ற விளம்பர அறிவிப்பு திருச்சியில் வெளியாகி இருக்கிறது .

மாணவர்கள் தேர்வில்வெற்றி பெற்று சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ சபை கூட்டத்தை மேற்படி பாதிரியார். மேலே குறிப்பிட்ட பள்ளிக்கூட வளாகத்தில் ஏற்பாடு செய்கிறார்.

அரசு உதவி பெறக்கூடிய
சிறுபான்மை கல்வி நிறுவனம் என்கின்ற அந்தஸ்தோடு செயல்படக்கூடிய இந்த பள்ளி கூடம்,

மதமாற்றம் செய்வதையே தன்னுடைய வாழ்நாள் பணியாகச் செய்து கொண்டிருக்கக் கூடிய தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி சார்ந்த மோகன் சி லாசரஸ் என்கின்ற கிறித்தவ பாதிரியாரை அழைத்து செய்யும் ஜெபமும் செய்ய இருப்பதாக தெரியவருகிறது.

மோகன் சி லாசரஸ் என்ற பாதிரியார் சமீபத்தில் சர்ச்சைக்குரிய இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் இந்து வழிபாட்டு தலங்கள் குறித்தான அவதூறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

“இந்து கோவில்கள் எல்லாம் சாத்தான்கள் குடி கொள்ளும் இடம் ” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாது வருடத்திற்கு 25,000 நபர்களை நான் கிறிஸ்துமதமாற்றம் செய்கிறேன் என்று கூட ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் .

அப்பாவி மக்களிடம் ஏழ்மை, வறுமை, இயலாமை போன்றவற்றை பயன்படுத்தி

“கர்த்தர் அனைத்தையும் உனக்காக தருவார்.

இயேசுவை நம்புங்கள் உங்களுக்கு எல்லாம் கிடைக்கும் ”
என்று ஆசை வார்த்தை கூறி,

இந்து மத நம்பிக்கைகளை சிதைத்து கிறிஸ்தவத்திற்கு வர வைப்பதில் வல்லவர்.

அதாவது கிறிஸ்தவ மதமாற்றம் செய்வதில் ஆகச்சிறந்த பாதிரியார் இந்த மோகன் சி லாசரஸ்.

இப்படி மதமாற்றம் செய்யக்கூடிய
ஒரு மத வியாபாரி
மோகன் சி லாசரஸ் அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சியில் இந்த கிருத்தவ பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஒரு ஜெபக்கூட்டம் நடக்குமேயானால் அப்பாவி மாணவர்களின் மனதில்,

“இயேசு எல்லாம் செய்ய வந்தவர் ” நீங்கள் தேர்வில் வெற்றி பெற்று,
அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமென்றால்
“இயேசு பிரானை போற்றி துதியுங்கள்” என்று மதப்பிரச்சாரம் செய்து மாணவர்களுடைய மனதில் மாற்றத்தை உருவாக்கி ,

பின்னர் மதமாற்றம் செய்வதற்காகவே இந்த கூட்டம் நடைபெறுவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

அரசு நிதி உதவியோடு செயல்படக்கூடிய இந்த சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் அனைத்து மாணவர்களும் தான் படித்து வருகிறார்கள் .

அப்படி இருக்கையில்
ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ மதப் பிரச்சார கரை அழைத்துவந்து தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

அதற்காக நாங்கள் ஜெபக்கூட்டம் நடத்துகிறோம் என்று சொன்னால் அது முழுக்க முழுக்க கிறிஸ்தவ மதத் திணிப்பு ஆகும் .

நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள் நிச்சயமாக தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவார்கள் .

ஆனால் நீங்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்கு இயேசுநாதர் தான் உதவி புரிந்தார் என்று சொன்னால்எப்படி இருக்கும் ?

இல்லை நாங்கள் அனைத்து மத மாணவர்களுக்கும் பொதுவானவர்கள் கிறித்தவ மதத் திணிப்பு இல்லை என்று இந்த கிருத்துவ பாதிரியார் சொல்வாரேயானால் ,

அதே பள்ளி வளாகத்தில்
மாணவர்கள் தேர்வில்வெற்றி பெறுவதற்காக சரஸ்வதி கூட்டு வழிபாடு,

“ஹயக்ரீவர் ஜெப வழிபாடு” நடத்துவதற்கு மேற்படி பள்ளி நிர்வாகம்
அனுமதி வழங்குமா?

அப்படி வழங்கினால்
இந்த நிறுவனம் கிறித்தவ மதமாற்ற நிறுவனம் இல்லை என்பது நிரூபணமாகும்.

இல்லையென்றால் பள்ளிக்கூட மைதானத்தை மதமாற்ற கூடமாக மாற்றிய கொடுஞ்செயலுக்கு அரசாங்கமே ஆதரவு தெரிவிப்பது போல் ஆகிவிடும் .

நாங்கள் கிறித்தவ மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல .

உண்மையிலேயே மாணவர்கள் மீது அக்கறை இருக்குமானால் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக் கூடிய பாதிரியார் கிறிஸ்தவ திருச்சபைகளில் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்காக கூட்டுவழிபாடு என்று சொன்னால் நாங்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை.
கல்வி நிறுவனங்களில் அரசியல்வாதிகள் மற்றவர்களோ வந்து தன்னுடைய கருத்துக்களை மாணவர்கள் மனதில் இருத்தி வைக்கக்கூடாது என்று அதற்கு தடை விதிக்க அரசு ஆணையை பள்ளிக்கல்வித்துறையின் வெளியிட்டு இருப்பது தாங்கள் அறிந்ததே. மேற்படி பள்ளி நிர்வாகம் கல்வி அல்லாத பிரச்னைகளுக்கு இந்த பள்ளி மைதானத்தில் பயன்படுத்துவது மதமாற்றம் செய்வதற்கு உதவியாக இருப்பது போல் இருக்கிறது

அது இல்லாமல் இப்படி ஒரு பள்ளி மைதானத்தில் நடத்துவது தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

குறிப்பாக பாதிரியார்
மோகன் சி லாசரஸ் அவர்கள் இந்த கோவில்களில் இந்து வழிபாட்டு முறைகள் அவமதித்து பேசினார்

மதக் கலவரங்கள் முயற்சித்தார் என்று திருச்சி காவல் நிலையத்தில் ஏற்கனவே இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு, எப்.ஐ.ஆர் . போடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது
நாகை மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஆறு காவல் நிலையங்களில் அவர் மீது எப்ஐஆர் ஆர் போடப்பட்டுள்ளது.

தமிழகஅரசும், பள்ளிக்கல்வித்துறையும் படிக்கக்கூடிய மாணவர்களை வெற்றி பெற செய்ய கிறிஸ்தவர் அல்லாத , மாணவர்களை மதமாற்ற கூடிய மோகன் சி லாசரஸ் அவர்கள் கலந்து கொள்ளக்கூடிய மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

இராம. இரவிக்குமார்
மாநில பொதுச்செயலாளர்
இந்து மக்கள் கட்சி தமிழகம்
86430_81430
96553 – 65696

Latest Posts

ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னையில் சிக்னல் கம்பம் : வாகன ஓட்டிகள் வரவேற்பு!!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சென்னை காமராஜர் சாலையில் சோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது சென்னை போக்குவரத்து துறை. தமிழகத்தின் தலைநகரான...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

Don't Miss

விமானத்தில் ஒலித்த தமிழ் குரல், அசத்தும் சென்னை ராயபுரம் பைலட் ப்ரியாவிக்னேஷ்..!

விமானத்தில் தகவல்களை தெளிவான தமிழில் அறிவித்த ஒரு விமானி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார் நமது ராயபுரத்தை சேர்ந்த ப்ரியாவிக்னேஷ். சென்னையில்...

வறுமையின் உச்சம் தள்ளாடும் வயதிலும் தளராமல் சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது மூதாட்டி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பக் கலையை வெளிப்படுத்தி ரோட்டோரம் பிச்சையெடுப்பது காண்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது. கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம்...

ரூ.100 லஞ்சம் தரமறுத்த சிறுவன் முட்டை வண்டியைத் கவிழ்த்துவிட்டு அதிகாரிகள் அட்டூழியம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், லஞ்சம் கொடுக்காத சிறுவனின் முட்டை வைத்து இருந்த தள்ளுவண்டியை, மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்ந்ததில் அதில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து நாசமாகின.

குழந்தை கடத்த முயன்றவர் மீது ஒரு புலியை போல் பாய்ந்த தாய்…

டெல்லி ஷகர்புர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த, டிப்டாப் ஆசாமிகள் இருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

பின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...