Sunday, September 27, 2020

சற்றும் எதிர்பாராத போலீஸ், முட்டி தாக்கும் ஒரு எருமை மாடு!

உத்தரபிரதேசத்தின் சம்பாலில் உள்ள ஒரு காவல் நிலைய வளாகத்தின் உள்ளே ஒரு எருமை ஒரு போலீஸ் அதிகாரியை முட்டி தாக்கும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Latest Posts

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

3,501 நகரும் நியாயவிலை கடைகளை தமிழகமுதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில்...

ஹிந்து தர்மார்த்த ஸமிதியின் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியின் அன்பு வேண்டுகோள்!

அரசின் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக, இந்த ஆண்டு, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருப்பதால், திருக்குடை கமிட்டியினர், பக்தர்கள்,...

வேண்டாமே இந்த விபரீத பப்ஜி (PUBG) விளையாட்டு

தமிழகதில் ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனது மொபைலில் ஆன் லைன் மூலம் நண்பர்களுடன் PUBG விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்துள்ளான். மருத்துவமனையில் சோதித்த போது சிருவன் மாரடைப்பால் இறந்துள்ளான் என்ற செய்தி அங்கு பலரையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. காரணம் 16 வயதில் மாரடைப்பா ? என்பதே..

கடந்த 20 ந் தேதி செய்தித்தாளில் வந்த இச்செய்தி தான் இந்த நீண்ட கட்டுரை எழுதக் காரணம்.

உடலையும் உள்ளத்தையும் உறுதியுறச் செய்வதே விளையாட்டு :

உடலுக்கும், உள்ளத்திற்கும் உறுதியையும் உற்சாகத்தையும் தருவதே விளையாட்டு. குழந்தைகளுக்கு விளையாட்டாக பல நல்ல விசயங்களை விதைக்க எண்ணிய மகாகவி ..

ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

என பாடலை எழுதிய மகாகவி பாரதி மேலும் சொல்கிறான்…

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

ஆனால் இன்று பெரும்பாலான குழந்தைகள் மைதானங்களில் விளையாடுவதை விட ஆன் லைன் விளையாட்டுகளிலேயே நாட்டம் செலுத்துகின்றனர். விளையாட்டுகளினால் உடல் உறுதியாக வேண்டும் என்ற முதல் நோக்கமே இந்த ஆன்லைன் விளையாட்டுகளால் தகர்ந்து போகிறது. மாறாக விளையாட்டுடன் ஜங்க் உணவும் சேர்ந்து குழந்தைகள் அதிக எடை கொண்டவர்களாக ஆகிறார்கள். அடுத்ததாக மனது சம்பந்தப்பட்டது, இது குறித்து தான் சற்று விரிவாக பார்க்க வேண்டியுள்ளது.

வீடியோ கேம்களின் (விளையாட்டு) பரிணாமம் :

எனக்கு தெரிந்து கையடக்க அனலாக் எலக்ட்ரானிக் கருவியில் தொடங்கியது இதன் ஆரம்பம். சிறு சிறு பெட்டிகளை விரைவாக சேர்ப்பது போன்ற விளையாட்டுகள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை தந்தது. பிறகு கம்யூட்டரில் விளையாடும் சாதாரண வீடியோ

கேம்கள், லாப்டாப், ஐ-பேடுகளில் குழந்தைகளுடன் பெற்றோரும் சேர்ந்து விளையாடிய ஹாங்கிரி பர்ட் விளையாட்டுகள் வரை விளையாடுபவர் வெளியில் இருப்பதாகவும் நாம் இயக்கும் கட்டளைக்கு ஏற்ப திரையில் பொம்மைகள் நகருகின்றன என்பதாக இந்த டிஜிட்டல் விளையாட்டுகள் வளர்ச்சியுற்றன.

இதன் பின்னர் ப்ளே ஸ்டேஷன்களில் விர்ச்சுவல் விளையாட்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்தது. பெரிய பெரிய ஷாப்பிங் மால்களிலோ, சுற்றுலாத்தலங்களை ஒட்டியுள்ள பொழுதுபோக்கு இடங்களில் இந்த மாதிரியான விளையாட்டுகள் அதிகமாகின. பணக்கார வீட்டு குழந்தைகளும், மேல்நிலையில் உள்ள நடுத்தர குடும்பத்து குழந்தைகளும் மட்டுமே விளையாடி வந்தனர். பின்னர் வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளுடன் இதற்கான பிரத்யேக கருவிகளை இணைத்து விளையாடும் வகையில் உருமாறியது. இந்த விளையாட்டுகளில் ப்ரோக்ராம் செய்யப்பட்ட விளையாட்டு வீரருடன் தானும் ஒரு ஆளாக நினைத்து விளையாடுவதாக எண்ணி குழந்தைகள் அதிக நேரம் இவ்விளையாட்டுகளில் செலவிட்டாலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளை பார்க்க முடிந்தது.

2016 லிருந்து இந்த விளையாட்டுகள் ஆன்லைன் விளையாட்டுகளாக ஸ்மார்ட் போன் வளர்ச்சியுடன் சேர்ந்து வளர்ந்தது. மொபைல்களில் புதுப்புது செயலிகள் தரவிறக்கம் செய்யப்படும் போது அதன் கூடவே இந்த ஆன் லைன் விளையாட்டுகளும் அதிகமாகின.

PUBG நிறுவனத்தின் வரலாறு :

தென் கொரியாவின் Krafton Inc. (வணிக நிறுவனம் : Krafton Game Union) நவம்பர் 5 2018 ஆம் ஆண்டு ப்ளூ ஹோல் (Bluehole) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது தான் இந்த கம்பெனி. பப்ஜி விளையாட்டு போலவே சிக்கல்களும், அதிரடி காட்சிகளும் நிறைந்தது. 2007 ல் சியோலை மையமாக கொண்டு Chang Byung-gyu என்பவர் Bluehole Studio என்ற நிறுவனத்தை துவக்கினார். ஆரம்பத்தில் ஒரு தேடுதளத்திற்கான மென்பொருளை தயாரித்த இந்த நிருவனம் பின்னர் குழந்தைகளுக்கான விளையாட்டு மென்பொருளை உருவாக்கும் வேலையில் இறங்கியது. அதிரடித் திருப்பமாக சீனாவைச் சேர்ந்த Tencent என்ற கம்பெனி ப்ளு ஹோல் ஸ்டுடியோவில் முதலீடு செய்ததாக பத்திரிக்கைகளில் செய்திகள் பரவின. ஆரம்பத்தில் மறுத்த ப்ளுஹோல் பின்னர் 1.5% சதவீத பங்குகளை 70 பில்லியன் முதலீட்டில் பெற்றது என ஒத்துக் கொண்டது. 5 ட்ரில்லியன் மதிப்புடைய Bluehole Studio சீனாவின் Tencent மீண்டும் 10% சதவீத பங்குகளை வாங்க மேலும் 500 பில்லியனை முதலீடு செய்துள்ளது. கடந்த 2015ல் Bluehole Studio என்பது Bluehole என்ற பெயருடன் இனி இயங்கும் என சொல்லப்பட்டது. இதற்கிடையே Pnix Games என்ற நிறுவனத்தை வாங்கியது. இந்நிறுவனம் மொபைல் டெவலப்பராக இருந்தது , பின்னர் Bluehole Pnix in June 2016 என பெயர் மாறியது. அதன்பின் வட அமெரிக்காவில் Krafton Inc தனது துணை நிறுவனமாக En Masse Entertainment துவக்கியது. 2018 Delusion studio என்ற மொபைல் டெவலப்பர் கம்பெனியை 2018ல் வாங்கியது. அது Guardian Stone, Jellipo, House of Mice and, most notably, Castle Burn போன்ற சில பிரபலமான விளையாட்டுகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தது.

Ginno Games என்பது Bluehole லின் சார்பு நிறுவனம், அது ஆரம்பத்தில் battle royale games, PlayerUnknown’s Battle Grounds (PUBG), Brendan Greene என்பவர் உருவாக்கிய இந்த விளையாட்டு மிகவும் பிரபலமானதை அடுத்து தங்கள் நிறுவனத்தை மீண்டும் ஒருமுறை PUBG Corporation என பெயர் மாற்றியது.

இந்த நிறுவனத்தின் தலைசுற்றும் கதை நமக்கு எதுக்கு என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு முறை இந்த விளையாட்டுக்களை டவுன்லோடு செய்யும் போதும் கொரிய, சீன நிறுவனங்களின் சொத்து மதிப்பு தான் கூடுகிறது. மாறாக நமது குழந்தைகளுக்கு நேர விரயம், படிப்பின் மீது கவனம் செலுத்தாமை, உளவியல் சிக்கல் தான் மிஞ்சுகிறது.

ஆன் – லைன் விளையாட்டு ப்ளூவேல் விபரீதம் :

May 2016 ஆம் ஆண்டு ரஷ்யாவில் வெளிவரும் Novaya Gazeta என்ற புலனாய்வு அரசியல் பத்திரிக்கை முதன் முதலில் Blue Whale Challenge என்ற புதிய விளையாட்டு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருவதை வெளிக்கொண்டு வந்தது. இந்த விளையாட்டில் 50 கட்டளைகள் வரை சொல்லப்படும். இந்த சவால் விளையாட்டில் பங்கு பெறுபவர்கள் ஒவ்வொரு சவாலையும் முடித்து அதை சமூகவலைதளத்தில் பதிவிடுவார்கள். இந்த சவாலில் தங்களைத் தாங்களே உடல்நீதியாக வருத்திக் கொள்ளும் சவால்களும் உண்டு. இதன் உச்சமாக தற்கொலை செய்து கொள்வதாக முடியும்.

நவம்பர் 2015, ரஷ்யாவைச் சேர்ந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டதற்கு முன் “nya bye” என சமூகவலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து இதுகுறித்து விசாரனை தீவிரமாகியது. Blue Whale Challenge குறித்து பல செய்திகள் முன்னுக்குப்பின் முரணாக வந்தது. ஆனால் இளைஞர்களிடையே தற்கொலை எண்ணத்தை தூண்டும் இந்த விளையாட்டு மிகுந்த அச்சத்தை உலகநாடுகளில் ஏற்படுத்தியது.

2016 ஆம் ஆண்டு Philipp Budeikin, என்ற பல்கலைக்கழகத்தால் நீக்கப்பட்ட உளவியல் துறை மாணவன்  2013 ஆண்டு வாக்கில் இந்த விளையாட்டை உருவாக்கியதாக தெரிவித்தான். ஆரம்பத்தில் தான் விளையாட்டாக செய்ததாக தெரிவித்தாலும் பின்னர் இவன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படது. 2016 களில் 16 க்கும் மேற்பட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஜூன் 2017,  Ilya Sidorov என்ற மாஸ்கோவைச் சேர்ந்த போஸ்ட்மேன் கைது செய்யப்பட்டார். 32 க்கும் மேற்பட்ட குழுந்தைகள் இவருடைய Blue Whale சவால் விளையாட்டின் குழுவை ஏற்படுத்தி தனது கட்டளைப்படி அவர்கள் தங்களை உடல்நீதியாக வருத்திக் கொள்ளவும், இறுதியில் தற்கொலைக்கு தூண்டியதாகவும் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

ஜூன் 2018, ரஷ்யாவின்  Nikita Nearonov என்ற நிதி ஆய்வாளர் 10 க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகளிடம் Blue Whale சவால்  நடத்தியதாகவும் அதில் 2 குழந்தைகள் மட்டுமே தப்பித்ததகவும் தெரிவித்து இவரை கைது செய்தனர். ரஷ்யா முழுவதும் ஆரம்பத்தில் பரபரப்பையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த சவால் விளையாட்டு இத்தாலி, ஈரான், பல்கேரியா, சவுதி அரேபியா, பிரேசில், சீனா, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இவ்விளையாட்டு பரவியது. உடல்நீதியாகவும், மனநீதியாகவும் பிரச்சினையை ஏற்படுத்தும் இவ்விளையாட்டு குறித்து மேற்குறிப்பிட்ட நாடுகள் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கியது. சில நாடுகள் 40 க்கும் மேற்பட்ட வீடியோ கேம்ஸ்களை தங்கள் நாடுகளில் தடையும் செய்தது.

PUBG யும் உளவியல் பிரச்சினையும் :

PUBG Corporation மூலம் 2017 டிசம்பரில் Battlegrounds என்ற ஆன் லைன் PUBG விளையாட்டு விண்டோசில் அறிமுகப்படுத்தியது. 2018 ல் மைக்ரோசாஃப்ட்  ஸ்டூடியோ Xbox One via Xbox Game Preview ஆகிய தளங்களில் வெளியிட்டது. இதே காலக்கட்டத்தில் Android and iOS தளத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. 60 மில்லியன் காப்பிகள் விற்றுத் தீர்ந்து சாதனை நிகழ்த்தியது இந்த விளையாட்டு.

இது வீடியோ கேம் விளையாட்டுத் தானே பின் எப்படி உளவியல் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த விளையாட்டில் குறந்தது 4 பேர் கொண்ட குழு முதல் 100 பேர் வரை விளையாட முடியும் என்பதே இவ்விளையாட்டின் சிறப்பு. பெரும்பாலும் ஆயுதங்களுடன் சண்டயிடும் வீரர்களில் உயிருடன் கடைசியில் எஞ்சி இருப்பவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். சண்டை நடக்கும் இடத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் விளையாட்டில் புதியதாக சேரும் நபர், குழுவாக பாராசூட்டிலிருந்து இறக்கி விடப்படுவது போன்ற விர்ச்சுவல் கேம். இது தான் உளவியல் பிரச்சினையின் முதல் புள்ளி. பாராசூட்டிலிருந்து இறங்கும் போதே விளையாடுபவருக்கு தானே களத்தில் குதித்தது போன்ற எண்ணம் வர கடைசி வரை விளையாடி முடிக்க வேண்டும் என்பதுடன் நிஜத்தில் தன்னால் செய்ய முடியாதை இந்த விர்ச்சுவல் தளத்தில் செய்ய முடிவதால் சீக்கிரமே இவ்விளையாட்டிற்கு அடிமை ஆகி விடுகிறான். நேரம் காலம் தெரியாமல் குழந்தைகள் இவ்விளையாட்டிலேயே மூழ்கி விடுகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு வன்முறை எண்ணத்தையும் விதைக்கிறது.

பெற்றோர்களும் நமக்கு தொல்லைத் தராமல் ஏதோ வீடியோ கேம் விளையாடுகிறான் என இதன் விபரீதம் புரியாமல் இருந்து விடுகின்றனர். சில குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதாக கூறி தனிமையில் யாருக்கும் தெரியாமல் இவ்விளையாட்டிற்கு அடிமையானதால் தொடர்ந்து பல மணி நேரம் விளையாடுகின்றனர் என தெரிவிக்கின்றனர்.

இந்த PUBG விளையாட்டினால் நிகழ்ந்த விபரீதங்கள்

கடந்த மே 28 2019 மத்திய பிரதேசம், நீமுச் பகுதியைச் சேர்ந்த ஃபர்ஹான் தொடர்ந்து 6மணி நேரம் PUBG விளையாடியுள்ளான். பின்னர் ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்த நிலையில் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதீத உணர்ச்சி வயப்பட்ட தால் மாரடைப்பு ஏற்பட்டு இம்மரணம் நிகழ்ந்திருப்பதாக சொன்னவுடன் தான் ஃபர்ஹானின் தந்தை ஹாரன் ரஷித் குரேஷிக்கு விபரீதம் புரிந்தது. ஃபிஸா குரேஷி சகோதரி, ஃபர்ஹான் தனது மொபைலில் PUBG விளையாடிக் கொண்டிருக்கும் போது தான் அருகில் இருந்ததாகவும் அவனோடு விளையாடிய நண்பர்களை திட்டிக் கொண்டே மயங்கி விழுந்தான் எனக் கூறுகிறார்.

ஜனவரி 20, 2020, 25 வயது ஹர்ஷல் மனானே, மஹாராஷ்ட்ரா, PUBG தொடர்ந்து பல மணி நேரம் விளையாடியுள்ளார். மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த பின்னர் நெக்ரோசிஸ் எனும் மூளைக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக இறந்துள்ளார் எனவும் இதற்கு அதீத உற்சாகம்  காரணமாக இருக்கலாம் என தெரிவித்தனர். அதீத உற்சாகத்தின் (over excitement) போது அட்ரீனலின் சுரப்பு மிக அதிகமாகும் போது இத்தகைய விபரீதம் நிகழ்வதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே போன்ற இன்னும் பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். தான் விளையாடுவதற்கு தொல்லையாக இருந்த 65 வயதான தனது தந்தையக் கொன்ற கர்நாடக மாநில இளைஞர், ஹரியாணா மாநிலம் ஜிண்ட் பகுதியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தாய் அவனது மொபைலை பிடுங்கி வைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், விளையாடுவதற்காக ஒரு வருடம் பள்ளிக்கு செல்லாமல் பிறகு அதை கண்டு பிடிக்கப்பட்ட பின் வீட்டை விட்டு ஓடிய புனேவைச் சேர்ந்த மாணவன், PUBG விளையாடுவதைக் கண்டித்த தனது 18 வயது அண்ணனைக் கொன்ற 15 வயது மகாராஷ்ட்ரா பிவாண்டியை சேர்ந்த மாணவன். தொடர்ந்து 45 மணி நேரம் PUBG விளையாடிய தெலுங்கானா, ஜிக்‌ஷியலைச் சேர்ந்த மாணவனுக்கு Bad Posture என்ற நிலை வந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கும் போதே மரணமடைந்து விட்டார். பல மணி நேரம் மொபைலில் குனிந்து விளையாடியதால் கழுத்து பகுதி, நரம்புகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இந்த விபரீதம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

PUBG போன்ற விர்ச்சுவல் ஆன் லைன் விளையாட்டிற்கு அடிமையான குழந்தைகளை கண்டிக்கும் போது பெறோர்களிடமோ, சகோதரர்கள், நண்பர்களிடம் கோபமும், சண்டையும் போடுவதோடு சில நேரங்களில் தற்கொலையும் செய்து கொள்வதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதிக நேரம் இது போன்ற விளையாட்டுகளில் குழந்தைகள் செலவிடாமல் பெற்றோர்கள் எச்சரிக்கையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக நாடுகளில் இந்த ஆன் லைன் வீடியோ விளையாட்டுகளால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்து WHO உலக சுகாதார நிறுவனம், Gaming Disorder எனும் விளையாட்டினால் ஏற்படும் கோளாறு குறித்து தனது 11வது திருத்த சர்வதேச நோய் வகைப்படுத்துதலில் இதனை சேர்த்திருப்பது குறிப்பிடத் தக்கது. இது போன்ற விளையாட்டுகளை சட்டரீதியாக தடை செய்ய முடியுமா ? எனத் தெரியவில்லை. தடுத்தாலும் வேறொரு ரூபத்தில் நம் கையடக்க மொபைலில் வந்திறங்கத் தான் செய்யும். மாறாக நாம் எச்சரிக்கையுடன் இருக்க முடியும்.

இந்தியாவில் மாணவர்களின் படிப்பில் கவனச் சிதறல் இந்த PUBG விளையாட்டினால் நடக்கிறது என்பதை நான் அறிந்து கொண்டது, நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாணவர்கள் துணிவுடன் பள்ளித் தேர்வை சந்திக்க வேண்டும் எனச் சொல்லும் “பரிக்‌ஷா பே சர்ச்சா” என்ற மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ழ்சியில் ஒரு மாணவனின் பெற்றோர், தனது மகன் பாடத்தில் கவனம் செலுத்தால் விளையாட்டிலேயே மூழ்கி இருக்கிறான் எனச் சொன்ன போது பிரதமர் மோடி என்ன உங்கள் மகன் PUBG விளையாட்டிலேயே மூழ்கி இருக்கிறானா ? என சொன்ன போது தான். மேலும் டிஜிட்டல் தொழில் நுட்பம் வளர்ச்சியை நாம் நினைத்தாலும் தடுக்க முடியாது, ஆனால் அதை எப்படி பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது என்றார் மோடி.

உண்மை தானே! தங்களை தொல்லைப்படுத்தாமல் விளையாடட்டும் என குழந்தைகளுக்கு தனது மொபலை கொடுக்கும் பெற்றோர்கள் இனி ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்.

டெயில் பீஸ் ; ஆன் லைனில் ரம்மி ஆடிக் கொண்டிருப்பதை கொஞ்சம் நிறுத்தி வைத்து விட்டு இந்தக் கட்டுரை குறித்து உங்களின் கருத்தை தெரிவியுங்கள் நண்பர்களே!

– ராஜேஷ் ராவ்.

Latest Posts

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

3,501 நகரும் நியாயவிலை கடைகளை தமிழகமுதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில்...

ஹிந்து தர்மார்த்த ஸமிதியின் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியின் அன்பு வேண்டுகோள்!

அரசின் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக, இந்த ஆண்டு, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருப்பதால், திருக்குடை கமிட்டியினர், பக்தர்கள்,...

Don't Miss

Emergency light பேட்டரிக்குள் வைத்து தங்கத்தை கடத்திய பலே பயணி!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு விமானத்தில் வந்த பயனிடம் இருந்து சுமார் 1 கிலோ 699 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கத்தை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்...

பகலில் மருத்துவ பணி, இரவில் பயங்கரவாதிகளுக்கு உதவிய அப்துல் ரகுமான்!

பகலில் மருத்துவராகவும், இரவு நேரங்களில் IS பயங்கரவாதிகளுக்கு உதவியாகவும் செயல்பட்டு வந்த அப்துல் ரகுமானை பெங்களூருவில் (NIA) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விநாயக சதுர்த்திக்கு எதிராக போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது: H ராஜா ட்வீட்

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழகத்தில் போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தேசியச் செயலாளர் H ராஜா தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

சென்னை: வடபழனி காவல் ஆய்வாளர் மாமூல் வாங்குகிறாரா? வாட்ஸ் ஆப்-பில் வீடியோ!!!

சென்னை: வடபழனி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கண்ணன் மாமூல் பணம் வசூல் செய்வதாக வெளியாகி உள்ள வீடியோ குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

அம்மனுக்கு வைத்திருந்த பூஜை பொருள்கள் மீது, பசுவின் மடியில் தானாக பால் சுரந்த அதிசயம்!

கும்பகோணத்தில் அருகேயுள்ள கொரநாட்டுகருப்பூர் மாற்று புறவழிசாலையின் அருகே ஒரு தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியின் வளாகத்தில் சுயம்பு மகாசக்தி மேற்கத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடிமாதத்தின் கடைசி...