Friday, August 14, 2020

நாமக்கல் லாரி ஓட்டுனர் மகள் கன்னிகாவுடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி( தமிழில் கேளுங்கள்)

பொதுத் தேர்வில் சாதனைப் படைத்த நாமக்கல் லாரி ஓட்டுனர் மகள் கன்னிகாவுடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி. கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், கதர் ஆடைகளை...

Latest Posts

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

கோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்

நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...

வறுமையிலும் குழந்தைளின் online படிப்பிற்காக குடும்பத்திற்கு வாழ்வளித்த பசுவை விற்ற தந்தை

ஹிமாச்சல பிரதேசம், ஜ்வாலமுகியில் உள்ள கும்மர் கிராமத்தைச் சேர்ந்த குல்தீப் குமாரின் ஏழ்மை நிலை குறித்த செய்தியை வெளியிட்ட The Tribune பத்திரிக்கையும், அச்செய்தியை எழுதி வெளியிட்ட ரவீந்தர் சூத் பாராட்டுக்குரியவர்கள்.

கும்மர் கிராமத்தைச் சேர்ந்த குல்தீப் குமார், மண் வீட்டில் வசிக்கும் ஒரு பரம ஏழை. அவருடைய இரு குழந்தைகள் அன்னு & டிப்பு முறையே நான்காம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவல் பொது முடக்க காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் முடப்பட்டு, ஆன் – லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருகின்றன.

குல்தீப் குமார் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலும் ஆன்–லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டதுடன், அதற்காக ஸ்மார்ட் போன் வாங்கிட பள்ளியிலிருந்து அறிவுறுத்தியுள்ளனர். குறைந்தபட்சம் 6000 ரூபாய் இருந்தால் தான் ஸ்மார்ட் போன் வாங்க முடியும் என்ற நிலையில் தன்னிடம் 500 ரூபாய் கூட இல்லை என பள்ளி நிர்வாகத்திடம் சொல்லியுள்ளார் குல்தீப். ஆனால் குழந்தைகளின் படிப்புக்கு ஸ்மார்ட் போன் அவசியம் என பள்ளி நிர்வாகம் வலியுறுத்தி சொன்னதையடுத்து என்ன செய்யவதன்று புரியாமல் தவித்துள்ளார்.

வாழ்வளித்த பசுவை விற்க முடிவு :

சாதாரண மண் வீட்டில் வசிக்கும் குல்தீப்பால் வங்கி, தனியாரிடம் கடன் என எந்த முயற்சி செய்தாலும் அனைத்திலும் தோல்வியே மிஞ்சியது. இப்படியே நாட்கள் செல்ல, வேறு வழியில்லாமல் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக இருந்த ஒரே பசு மாட்டை, தனது குழந்தைகளின் படிப்பிற்காக, அதாவது ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக விற்றார் குல்தீப் குமார்.

The Tribune செய்தியின் எதிரொலி :

Ramesh Dhawala

இச்செய்தியை 22 ஆம் தேதி The Tribune – “Man sells cow to buy smartphone for online studies of his children” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது. இதைக் கேள்விப்பட்ட ஜ்வாலமுகி பா.ஜ.க எம்.எல்.ஏ., ரமேஷ் துவாலா, குல்தீப் குமாரின் நிலையைக் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்து BDO , SDM-ஐ தொடர்பு கொண்டு தேவையான நிதி உதவி செய்வதாக தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடயே டெல்லி, தி ஹிந்து பத்திரிக்கையின் செய்தியாளர் அமீத் பருவா தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதானமாக குல்தீப் குமார் செய்தி குறித்து பதிவிட்டதுடன், அந்த குடும்பத்தைத் தொடர்பு கொண்டு முதல் ஆளாக 10,000 பணத்தையும் அனுப்பியுள்ளார். தொடர்ச்சியாக காட்சி ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள் இச்செய்தியை பகிர்ந்ததுடன் பலரும் குல்திப் குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் மும்பையிலிருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில், பேருந்து, விமானம் மூலம் செல்ல பேருதவி செய்து அதன் மூலம் பலரின் பாராட்டைப்பெற்ற நடிகர் சோனு சூத், குல்தீப் குமாருக்கு உதவிட சற்றும் தாமதிக்காமல் அவரது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார். இப்படி தொடர்ச்சியாக தற்போது பலரும் குல்தீப் குமாருக்கு நிதி உதவி செய்து வருவதை பார்க்க முடிகிறது.

ஆர்.கே. விஜ் ஐபிஎஸ் தனது ட்விட்டர் தளத்தில் குல்தீப் குமாருக்கு தான் 10,000 ரூபாய் அனுப்பியதையும் , இதற்காக அந்த குடும்பத்தினரை தொடர்பு கொள்ள உதவிய பத்திரிக்கையாளரையும், முதன் முதலில் செய்தி வெளியிட்ட உள்ளூர் பத்திரிக்கையாளரையும் பாராட்டி பதிவிட்டிருக்கிறார். மேலும் விற்ற பசு மாட்டை குல்தீப் குமார் மீண்டும் வாங்கிட வேண்டும் என்ற தனது எண்ணத்தையும் வெளியிட்டுள்ளார்.

பிரதம மந்திர் ஆவாஸ் யோஜனா :

குல்தீப் குமார் “The Tribune” பத்திரிக்கையின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், ஸ்மார்ட் போன் வாங்க தேவையான 6000 பணத்திற்காக தான் அலைந்து திரிந்ததை தெரிவித்து, தன்னிடம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் BPL CARD இல்லை என்றும், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் பயனாளியாகவும் தான் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார். தான் பலமுறை பஞ்சாயத்து அலுவலகத்தில் தனது வீடு கட்டுவதற்காக விண்ணப்பங்கள் அளித்தும் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்திருந்தார்.

  மேதகு பண்டாரு தத்தாத்ரேயா

இச்செய்தியை அறிந்து ஹிமாச்சல பிரதேச ஆளுநர் மேதகு பண்டாரு தத்தாத்ரேயா, குல்தீப் குமார் குடும்ப நிலை குறித்து கங்ரா மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டிருக்கிறார். இதையடுத்து தாசில்தாரை உடனடியாக சென்று பார்வையிடவும், அவரது பெயரை BPL பயனாளியாக உடனடியாக சேர்க்கும்படியும் உத்திரவிட்டதோடு, குல்தீப் குமார் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு கட்ட உதவிட DC, BDO ஆகியோருக்கு துணை கமிஷ்னர் ராகேஷ் பிரஜாபதி உத்தரவிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளருக்கு பாராட்டு :

குல்தீப் குமாரை மீண்டும் தொடர்பு கொண்ட The Tribune பத்திரிக்கையிடம் தற்போது பல முனைகளிலிருந்து பலரும் போனில் பேசுவதும், தனது வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தி நிதி உதவி அளித்து வருவதையும் தெரிவித்திருக்கிறார் குல்தீப் குமார். தனது நீண்ட கால கனவான ஒரு நல்ல வீட்டை பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் தன்னால் தற்போது வீடு கட்ட முடியும் என்ற நம்ம்பிக்கையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”

என திருவள்ளுவரின் குறளுக்கேற்ப The Tribune பத்திரிக்கையும், அதன் செய்தியாளர் ரவீந்தர் சூதும் மிகவும் பொறுப்புடன் வெளியிட்ட செய்தி தற்போது குல்தீப் குமாருக்கு மலையளவு உதவியாக அமைந்திருக்கிறது.

குல்தீப் குமார் போன்றவர்கள் இந்த தேசத்தில் தனித்து விடப்படுவதில்லை என்பதும், பொறுப்பான செய்திகள் வெளிவரும் போது, பலரும் அதற்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க தயங்குவதில்லை என்பதையும், இந்த உதவும் தயாள குணம் தான் இந்திய மக்களின் இயல்பான மனநிலை என்பதையும் இச்செய்தி நமக்கு புரிய வைத்துள்ளது.

பத்திரிக்கையாளர் ரவீந்தர் சூதிற்கு நமது சிரம் தாழ்ந்த நன்றி, பாராட்டுக்கள்.

– ராஜேஷ் ராவ்

Latest Posts

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

கோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்

நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...

Don't Miss

வறுமையின் உச்சம் தள்ளாடும் வயதிலும் தளராமல் சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது மூதாட்டி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பக் கலையை வெளிப்படுத்தி ரோட்டோரம் பிச்சையெடுப்பது காண்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது. கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம்...

ரூ.100 லஞ்சம் தரமறுத்த சிறுவன் முட்டை வண்டியைத் கவிழ்த்துவிட்டு அதிகாரிகள் அட்டூழியம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், லஞ்சம் கொடுக்காத சிறுவனின் முட்டை வைத்து இருந்த தள்ளுவண்டியை, மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்ந்ததில் அதில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து நாசமாகின.

குழந்தை கடத்த முயன்றவர் மீது ஒரு புலியை போல் பாய்ந்த தாய்…

டெல்லி ஷகர்புர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த, டிப்டாப் ஆசாமிகள் இருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

பின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...

முசிறி அருகே கண்டெடுக்கப்பட்ட பழமைவாய்ந்த பீரங்கி குண்டு!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மண்பறை என்ற கிராமத்தில், மிகப்பழமை வாய்ந்த பீரங்கி குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 7 கிலோ எடை கொண்ட கல்லாலான உருண்டை...