இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளித்த ஒ.அரங்கநாதனின் சமாதியில் முழம் பூ கூட வைக்க மணமில்லையா?

தாய்மொழியை காக்க உயிர் நீத்தவர்
விருகம்பாக்கம் அரங்கநாதன் சமாதி

தமிழ் மொழியை வைத்து பிழைத்தவர் கருணாநிதி சமாதி பாரீர்! பாரீர்!!

26.01.1965 அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து தீக்குளித்து தன்னுயிரை அக்கினிக்கு இரையாக்கி கொண்ட விருகம்பாக்கம் ஒ.அரங்கநாதன் நினைவிடத்தை இன்று பார்த்தோம்.

அன்னை தமிழ் மொழி காக்க
ஆதிக்க இந்தி
மொழி அன்னை தமிழ் மண்ணில் வரக்கூடாது என்று இந்தப் போலித் தமிழ் போராளிகள் செய்திட்ட பொய்யான பிரச்சாரத்தை
நம்பி உயிர்நீத்த
ஒரு தமிழ் உயிர் விருகம்பாக்கம் அரங்கநாதன்.

அவருடைய சமாதியின்
இன்றைய நிலையை பாருங்கள்.

ஏதோ தமிழ் மொழிக்காக
நாங்கள் தான் இருக்கிறோம் தமிழுக்காக உயிர் விடுவதை; அதை  விடுவோம்;இதை விடுவோம் என்று வாய்கிழிய வசனம் பேசும்
வசன வியாபாரிகள் இந்த திராவிடமுன்னேற்றக் கழகத்தினர்.

நாள்தோறும் 20,000 ரூபாய்க்கு பூ வைத்து “மூட பகுத்தறிவு பக்தி” செலுத்தும்பகுத்தறிவு காவலர்கள்  இந்த தமிழ்மொழி காவலருக்கு ஒரு நூறு ரூபாய்க்குகூட பூ வாங்கி வைக்க முடியாதா?

மீண்டும் தமிழ் மொழி காக்க மற்றுமொரு இந்தி எதிர்ப்புப் போராட்டம் கிளம்பும்;
கஸ்தூரிரங்கன் அறிக்கை கொளுத்துவோம் என்று வாடகைக்கு முழங்கும் வைகோஅவர்களுக்கு  இதுபோன்ற மொழிப்போர் தியாகிகளின் சமாதி எல்லாம் கண்ணில் தெரியாது.

காரணம் திமுக பிளவுபட்டபோது வைகோவிற்கு தீக்குளித்து இறந்த நொச்சி பட்டி தண்டபாணி  இடிமலை உதயன்… போன்றோரின் உயிர் தியாகங்கள் எல்லாம் மறந்து மீண்டும் திமுகவிற்காக முழங்குகிறார்.

அவருக்கு இது போன்ற உண்மை தியாகிகளின் சமாதி எல்லாம் மறந்து இருக்கும்.

  தமிழக மக்களே! படிக்கும் மாணவ  செல்வங்களே!!

இந்தப் போலி தமிழ்மொழி காவலர்களின் போர்ப்பிரகடனங்களை,
அடுக்குமொழி வசன வியாபாரிகளின்  அலங்கார வார்த்தைகளை
நம்பி யாரும் தங்களுடைய இன்னுயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்.

அப்படி உண்மையிலேயே தமிழ் மொழியை காக்க ;
தாய் மொழியை காக்க உயிர் தியாகம் தீக்குளிப்பு செய்வது என்றால்  ,

தமிழைக் காக்க உயிர் தியாகம் செய்வேன் என்று மேடையில் முழங்கும் ஏதாவது ஒரு தலைவன் முதலில்  தீக்குளித்து  சாகட்டும்.

இது போன்று  இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள்  சமாதியின் தற்போதைய நிலையில் புகைப்படமெடுத்து அனுப்பி வைத்து உதவிட வேண்டுகிறேன்.

அன்னைத் தமிழை காத்திடுவோம்
இந்தி மொழியை கற்றிடுவோம் அன்னிய மோகம்
அகற்றிடுவோம் .

இராம இரவிக்குமார்
இந்து தமிழர் கட்சி
நிறுவன தலைவர்
86430-81430

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*