அய்யப்ப பக்தர்களை கொடுமை படுத்திய பினராயி விஜயனே, திரும்பிப் போ #GO_BACK_PINARAYI

சென்னையில் 16.11.2018 அன்று திமுக தலைவர் திரு கருணாநிதி அவர்களுடைய சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வரும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் – க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GO_BACK_PINARAYI
” திரும்பிப் போ பினராயி விஜயனே” என்ற முழக்கத்தினை இந்து மக்கள் கட்சி நடத்தவுள்ளது.

சென்னைக்கு வரும் அவருக்கு நிறுவனத் தலைவர் தமிழ் திரு. அர்ஜூன் சம்பத் அவர்கள் தலைமையில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட உள்ளது.

அதே வேளையில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்கள் நடத்தப்படும்.

இந்தப் போராட்டம் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களுடைய சிலை திறப்புக்கு எதிரானது அல்ல.

நீதிமன்ற தீர்ப்புகளை காரணம் காட்டி அய்யப்ப பக்தர்களை அவமானப்படுத்தி, துன்பப்படுத்தி சபரிமலையின் புனிதத்தை கெடுக்க நினைக்கும் ஒரு கொடுங்கோன்மை ஆட்சியாளர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரானது. அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிப்போம் என்று சொல்லி அமைதியான கேரளத்தை போராட்டக் களமாக மாற்றிய பினராயி விஜயனுக்கு எதிரானது.

“சாமியே சரணம் ஐயப்பா ”
என்று சொல்லி சரணகோஷம் போட்டு வரக்கூடிய பக்தர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தி , துன்புறுத்தி, பொய் வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்த பினராயி விஜயனுக்கு எதிரானது.

நீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்துவோம் என்று சொல்லக்கூடிய பினராயி விஜயன் முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்றவில்லை ஏன்?

பினராயி விஜயன் அதிகார ஆணவத்தோடு அய்யப்ப பக்தர்களை பெரும் மன வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறார் ரெஹனா பாத்திமா , மேரி ஸ்வீட்டி , திருப்தி தேசாய் போன்ற பிறமதங்களை சேர்ந்த பெண்களையெல்லாம் பாதுகாப்புடன் அழைத்துச் சென்ற பினராயி விஜயன் சபரிமலை காப்போம் என்று இருமுடி சுமந்து ஐயனை தரிசிக்க சென்ற கேரள இந்து தலைவி சசிகலா டீச்சரை கைது செய்தது இந்து விரோதத்தின் உச்சம் .

அதுமட்டுமல்லாது நம் தமிழகத்தை சார்ந்த மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் இருமுடி சுமந்து அய்யப்பன் மலைக்கு தரிசனம் சென்ற போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரியின் மூலம் அவரை அவமதித்ததோடு ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தினார்.

இது தமிழர்களுடைய மனங்களில் ஆறாத வடுவாக இன்றும் இருக்கிறது . இதுமட்டுமல்லாது சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டமாக செல்லக்கூடாது, சாமியே சரணம் அய்யப்பா என்று சரண கோஷம் போடக்கூடாது, சபரிமலையில் தங்கக்கூடாது ,
உணவு சமைத்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை என்றதோடு பக்தர்களின் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல்,
சபரிமலையில் 144 தடை உத்தரவை திரும்பப் பெறாமல் கேரள அரசு பக்தர்களை வஞ்சித்து அவர்களின் பக்திஉணர்வுகளை நசுக்குகிறது.

சபரிமலை அய்யப்பனையும் , அய்யப்ப பக்தர்களையும் அவமானப்படுத்தி பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கிய பினராயி விஜயன் தமிழக மண்ணில் நுழையக்கூடாது. பினராயி விஜயன் திரும்பிப்போ என்ற கோரிக்கை முழக்கத்தோடு சரண கோஷம் முழங்கி கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டத்தை இந்து மக்கள் கட்சி நடத்துகிறது .

அனைத்து ஹிந்து மக்களும், பக்தர்களும் #GO_BACK_PINARAYI என்ற hashtags பயன்படுத்த கூறியுள்ளது.

இராம. இரவிக்குமார்
மாநில பொது செயலாளர்,
இந்து மக்கள் கட்சி .

Please follow and like us:

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*