இந்து மக்கள் கட்சியினர் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை புறக்கணிக்க உறுதிமொழி

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் மற்றும் மங்கலம்பேட்டை தொகுதியில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் மற்றும் அனுமன் ஜெயந்தி சம்பந்தமாக ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தைப்

திரு மணிகண்டன் ஜி-கடலூர் மாவட்ட செயலாளர்

திரு கமலகண்ணன்ஜி _ விருத்தாசலம் தொகுதி தலைவர்
உள்ளிட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர்
திரு NR பரணிதரன் அவர்கள் கலந்து கொண்டு இந்து மக்கள் கட்சி வளர்ப்பது எதிர்கால திட்டம் குறித்து விளக்கி பேசினார்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் மற்றும் மங்கலம்பேட்டை தொகுதியில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் மற்றும் அனுமன் ஜெயந்தி சம்பந்தமாக ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தைப்

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
……………………………………………………

  1. ஆங்கிலேயர்களும் கிறிஸ்தவர்களும் கொண்டாட வேண்டிய ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய எந்தக் கோயிலும் நள்ளிரவு 12 மணிக்கு ஆகம விதிமுறைகளுக்கு முரணாக அகால நேரத்தில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு தரிசனம், சிறப்பு வழிபாடு ,சிறப்பு கட்டணம் ….என்று சொல்லி எதுவும் நடைபெறக் கூடாது .

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை புறக்கணித்து நம்முடைய அன்னிய மோகத்தை அகற்றிட வேண்டும் என உறுதிமொழியை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  1. அனுமன் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடி இந்தப் பகுதியில் நல்லதொரு ஆன்மீகத்தின் மூலமாக அரசியல் எழுச்சியை ,இந்து அரசியல் எழுச்சி உருவாக்கிட அனைவரும் பாடுபட வேண்டும்.
  2. சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பாக வேலை செய்யக்கூடிய உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐஜி பொன்மாணிக்கவேல் அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பை தமிழக அரசும் காவல்துறையும் வழங்கிட வேண்டும். அவர் செய்யக்கூடிய பணிகளுக்கு தேவையற்ற இடையூறுகளை யாரும் ஏற்படுத்த வேண்டாம் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
  3. மண்ணை பாழாக்க கூடிய பிளாஸ்டிக் கவர் ஒழிக்கப்பட்டு துணிப்பை கலாச்சாரத்திற்கு மாறிட இந்து மக்கள் கட்சி தமிழக மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது .
  4. இந்து கோயில் சொத்துக்களை மீட்பதற்கும், ஹிந்து ஆலயங்களை காப்பதற்கும், மலைகள் மீது இருக்கக்கூடிய இந்து புனித கோயில்களுக்கு அருகில் வேண்டுமென்றே திட்டமிட்டு மதக்கலவரம் உருவாக்க வேண்டுமென மலையின் மீது சிலுவை வைத்து மலை ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய கிறிஸ்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
  5. சுதந்திரப் போராட்ட மாவீரர் தியாகி விஸ்வநாத தாஸ் அவர்களுடைய தியாகத்தையும் வீரத்தையும் போற்றி இந்த கூட்டத்தில் வீர வணக்க வழிபாடு செய்யப்பட்டது.

இந்த சமுதாயப் பணிக்கு சிறப்போடு வருகை தந்து பணியாற்றிட இசைவு தெரிவித்த அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

இராம .இரவிக்குமார்
86430_81430

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*