ஆண்டாள் கோவிலில் தாமரைக் கோலத்தினை அழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கை

Rama-Ravikumar

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் வரையப்பட்ட தாமரைக் கோலத்தில் அரசியல் சின்னம் பிரதிபலிப்பதாக கூறி அதை அழிக்க செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உயர்திரு. சத்திய பிரதா சாகு இ .ஆ .ப அவர்களிடம் 15.03.2019 வெள்ளிகிழமை சென்னை தலைமை செயலகத்தில் இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கை புகார் மனுவை சமர்ப்பித்தோம்.

உடன் திரு எஸ் வீரமணி ஐயா மற்றும் பழனி எம் மனோஜ்குமார் அவர்கள் . நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் பக்தர்கள் திருவிழாவிற்காக போடப்பட்ட கோலத்தில் தாமரை இருக்கிறது.
இது தேர்தல் விதிமீறல் என்று காரணம் காட்டி கோலத்தை அழிக்க செய்த தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கிறிஸ்தவ திருச்சபைகளில் பாரதப் பிரதமராக நரேந்திரமோடி வரக்கூடாது என்று வெளிப்படையாக பிரச்சாரம் செய்த பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்காத, பிரச்சாரக் கூட்டங்களை தடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கோரிக்கை புகார் மனு

பெரு மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் வேலைகள் நடைபெற்றுக் கொண்டு வரும் வேளையில் தேர்தல் விதிகளை காரணம் காட்டி ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சின்னமாக இருக்கக்கூடிய ஆண்டாள் திருக்கோயில் பங்குனி உத்திரத்தன்று தாயார் திருக்கல்யாண உற்சவம் நடக்கும் இதற்காக 14.03.2019 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கோலம் இடுவது ஆண்டாண்டு காலமாக இருந்து வருவது ஆனால் நேற்று கோவிலுக்கு வந்த தேர்தல் அதிகாரி கோலத்தில் தாமரைப்பூ இருக்கிறது இது குறிப்பிட்ட கட்சியின் சின்னம் இதனால் பக்தர்கள் மனதில் அந்த கட்சிக்கு வாக்களிக்கக் கூடிய மன மாற்றம் உண்டாகி விடும் எனவே இது தேர்தல் விதி மீறல் என்று காரணம் காட்டி சம்பந்தப்பட்ட கோவில் ஊழியர்களை அழைத்து கோலங்களை அழித்திருக்கிறார்.

இது முழுக்க இந்து பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் செயல் தேர்தல் விதிமுறைகளை மதிக்கிறோம் அதே நேரத்தில் கோவில் வழிபாட்டிற்காக தாமரைப் பூ எடுத்து சென்றால் கூட அதையும் தடுக்க செய்வாரா இந்தஅதிகாரி என்பது எங்களுக்குப் புரியவில்லை.

இவ்வளவு கண்டிப்போடு தேர்தல் விதிகளை பின்பற்ற கூடிய தேர்தல் அதிகாரிகள் வெளிப்படையாகவே கிறிஸ்தவ திருச்சபைகளில் பாரதப் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி வரக்கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள் திருச்சபைகளை அரசியல் பிரச்சார களமாக மாற்றுகிறார்கள். இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

ஆனால் சாதாரண ஒரு விஷயத்தை இவ்வளவு கவனத்தை ஆக பின்பற்றவேண்டிய அவசியம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை ஆகவே இந்து பக்தர்களின் வழிபாட்டு மத உணர்வுகளை புண்படுத்திய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோல அழிப்பு சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை புகார் மனுவை சமர்ப்பிக்கிறோம்.

பள்ளி கல்லூரி வளாகங்களில் மாணவர்களிடையே அரசியல் பிரச்சாரம் கூடாது என்று அரசு ஆணை இருந்தும் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவர்களுடைய பிரச்சாரம் செய்தது அந்த வளாகத்தை பிரச்சாரமாக மாற்றுவதற்கு அனுமதி அளித்த சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது தேர்தல் விதி மீறல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

நன்றி
இப்படிக்கு
இராம. இரவிக்குமார்

நாள் : 15.03.2019
சென்னை

Please follow and like us:

1 Comment

  1. The election commission shoukd take action and suspend cocerned also take care Hindus feelings and also reprmand chucgches talikng against PM Modiji

Leave a Reply

Your email address will not be published.


*