தமிழக நதிகள் இணைக்கப்பட்டு ராஜராஜசோழன் நீர்வழிச்சாலை என பெயர் வைக்க இந்துத் தமிழர் கட்சி கோரிக்கை

உலகை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன் நினைவு கோயில் இருக்கக்கூடிய கும்பகோணம் உடையாளூரில் மிகப்பிரம்மாண்டமான திருக்கோயில் கட்டப்பட வேண்டும் .
தமிழக நதிகள்
இணைக்கப்பட
திட்டமிடுக !!
தமிழக உள்ளூர் நதிகளை இணைத்து அமைக்கும் நீர்வழிப்பாதைக்கு
“ராஜராஜசோழன் நீர்வழிச் சாலை” என்று பெயர் சூட்ட வேண்டும்.

ராஜராஜசோழன் பக்தர்கள்பேரவை,
இந்து தமிழர் கட்சி
இந்துத் தமிழர் முன்னணி மற்றும் சிவனடியார்கள் தெய்வத்தமிழ் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாதமும்
“சதய நட்சத்திர தினத்தன்று” ராஜராஜசோழன் சிவலிங்கத் திருமேனிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, மலர் அர்ச்சனை, திருமுறை பாராயணம், கூட்டு வழிபாடு… என நடத்திக் கொண்டு வருகிறோம். என்பது தாங்கள் அறிந்ததே.
17 8 2019 சனிக்கிழமை சதய நட்சத்திர தினத்தன்று காலை 11 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

வழிபாடு நிறைவுற்ற பின்னர் வந்திருந்த அனைவரும் கீழ்க்கண்ட விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.

01. காஷ்மீர் விஷயத்தில் துணிச்சலாக முடிவு எடுத்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நலமோடும் வளமோடும் இருக்க ராஜராஜன் அருளாசி தர வேண்டும் என்று பிரார்த்திக்க பட்டது.

02.
சிவனடியார்கள் கைலாசம் சென்று சிவபெருமானை தரிசனம் செய்வதற்கு சீனா வழியாக செல்ல வேண்டி இருக்கிறது.

இந்த நிலையை மாற்றி சிவனடியார்கள்,

இந்திய பாதை வழியாக சென்று கைலாசநாதன் தரிசனம் செய்ய வேண்டும்.
சீனா ஆக்கிரமிப்பில் இருக்கக்கூடிய கைலாச பகுதியை மீட்பதற்கு பாரத பிரதமர் மோடி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குரிய வல்லமையை கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்க பட்டது.

03.
ஐப்பசி மாதம் நடைபெறக்
கூடிய சதய நட்சத்திர ராஜராஜசோழன் பெருவிழாவை தஞ்சாவூரில் தமிழக அரசு நடத்திக் கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே.

இந்த விழாவிற்கு வரக்கூடிய மரியாதை செய்யக் கூடிய அனைவருமே வணக்கத்துக்கு உரியவர்கள்.

அதே நேரத்தில் இந்து தேசியத்தின் அடையாளமாக விளங்கக்கூடிய மாமன்னர் ராஜராஜ சோழனை  ஒரு சாதிய வட்டத்திற்குள் சுருக்கி விட வேண்டாம்.  ஆகவே சாதிச் சங்கங்கள் பெயர்களை பயன்படுத்தாமல் தமிழருடைய அடையாளமான ராஜராஜ சோழனை வணங்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.
தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் இவர்களுக்கு உரிய அறிவுரையை வேண்டும். என்று கேட்டுக் கொள்கிறோம்.

04.
தெற்காசியா முழுமையும் அரசாட்சி செய்த மாமன்னன் சோழன் கட்டிய திருக்கோயில்களை எல்லாம் தமிழ்நாட்டிலிருந்து மற்றும் உலக நாடுகளிலிருந்து செல்லக்கூடிய தரிசனம் செய்ய விரும்பக்கூடிய தமிழர்களுக்கு ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களுக்கு வரிச் சலுகை கொடுப்பது போல “ராஜராஜசோழன் திருக்கோயில் யாத்திரை” என்கிற திட்டத்தை உருவாக்கி தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து தமிழர்கள் அதிகமான அளவில் யாத்திரை மேற்கொள்ள தேவையான வசதிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம்

05.ஐப்பசி மாதம் நடைபெறக்
கூடிய சதய நட்சத்திர பெருவிழா தஞ்சாவூரில் நடக்க இருக்கிறது.
இந்த ஆண்டு ராஜராஜசோழன் விருது “எழுத்து சித்தர் பாலகுமாரன்” அவர்களுக்கு வழங்கிட வேண்டுமென்று தஞ்சை மாவட்ட நிர்வாகத்தை தமிழக அரசை இந்தத் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

06.
தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று செயலாற்றக் கூடிய  மத்திய அரசுக்கு பாராட்டு.
அதேவேளையில் தமிழகத்தின் நீர்த் தேவையை பூர்த்தி செய்து நீர் மேலாண்மையை மேம்படுத்த கூடிய வகையில் தமிழக நதிகளை இணைப்பதற்கு உரிய செயல் திட்டத்தை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த தமிழக உள்ளூர் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு “மாமன்னன் ராஜராஜசோழன் நீர்வழிச்சாலை “என்று பெயரிட வேண்டும்.
இந்த நிகழ்ச்சிக்கு இந்து  தமிழர் கட்சி மாநில குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை சன் சிவா தலைமை வகித்தார். இந்து தமிழர்   கட்சி மாவட்ட தலைவர் பாலகுமார் முன்னிலை வகித்தார். மற்றும் ராஜ ராஜ சோழன் பக்தர்கள் பேரவை அமைப்பாளர் கும்பகோணம் பாலு அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள். மற்றும் சிவனடியார்கள் இயக்க நண்பர்கள் ஊர் பொதுமக்கள் திரளான அளவில் கலந்து கொண்டு வழிபாட்டில் பங்கேற்றனர்.

இராம இரவிக்குமார்  நிறுவனத் தலைவர் இந்துத் தமிழர் கட்சி
86430-81430
96553-65696

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*