Friday, August 14, 2020

நாமக்கல் லாரி ஓட்டுனர் மகள் கன்னிகாவுடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி( தமிழில் கேளுங்கள்)

பொதுத் தேர்வில் சாதனைப் படைத்த நாமக்கல் லாரி ஓட்டுனர் மகள் கன்னிகாவுடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி. கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், கதர் ஆடைகளை...

Latest Posts

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

கோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்

நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...

மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு கோவில் கட்ட பிரதமர் மோடிக்கு இந்து தமிழர் கட்சி வேண்டுகோள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம்
அருகில் இருக்கக்கூடிய உடையாளூர் என்கின்ற ஊரில் மாமன்னன்
ராஜராஜ சோழன் பள்ளிப்படை நினைவிடம் இருப்பதை அறிந்து  இந்து தமிழர் கட்சியின் சார்பில் அனைத்து சிவனடியார்கள் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இன்று 21 6 2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மாமன்னர்
ராஜராஜ சோழனுடைய சிவலிங்கத் திருமேனிக்கு பால் ,பன்னீர், திருமஞ்சனம், சந்தனம், தயிர், பச்சரிசி மாவு, வாசனை திரவியங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பான அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மாலை அணிவித்து , உதிரிப்பூக்கள் கொண்டு உறுதிமொழி
எடுத்து மனநிறைவான சிவபுராண
பாராயண தோடு இன்றைய நிகழ்வு அமைந்தது .

மாமன்னர் ராஜராஜனுடைய நினைவு
சிவலிங்கம்  இருக்கக்கூடிய இடத்தில் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருக்கோயில் கட்டுவதற்குரிய ஏற்பாட்டினை மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டும்.

பாரத பிரதமர் மாண்புமிகு
நரேந்திர மோடி அவர்கள் இந்த ராஜராஜனின் நினைவிடத்திற்கு வருகை தந்து இவருடைய அருளாசி பெற வேண்டும்.

மராட்டிய மாவீரன் வீர சிவாஜியை கௌரவித்தது போல இந்த  உடையாளூரில் மிகப்பெரிய ராஜராஜசோழன் திருக்கோயில் கட்ட வேண்டிய உதவிகளை செய்திட  நடவடிக்கை எடுத்திட வேண்டி இந்திய மாநில அரசுகளின் வலியுறுத்துவது என உறுதிமொழிஎடுத்துக் கொண்டோம்..

மேலும்
ஒவ்வொரு மாதமும் ராஜராஜனின் சதய நட்சத்திர தினத்தன்று சிவனடியார்கள் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களையும் ஒருங்கிணைத்து திருமுறைகள் பாராயணம் செய்வது,
வழிபாடு செய்வது, கூட்டுப் பிரார்த்தனை செய்வது, என்று இன்று தீர்மானிக்கப்பட்டது .

மாமன்னர் ராஜராஜ சோழனின்
பெருமைகளை பறைசாற்றும் விதமாக
செப்டம்பர் மாதம்  பிரச்சார இயக்கத்தை தமிழகத்தில் தொடங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மாமன்னன்
ராஜராஜ சோழன் குறித்து தவறான அவதூறு பரப்பும் கருத்துக்களை திரைப்பட இயக்குனர் ரஞ்சித் நிறுத்திக்கொள்ள வேண்டும்.மன்னிப்பு
கேட்க வேண்டும்.  இந்து மதத்தை விமர்சனம் செய்து பேசினால்
தமிழகத்தில் தலைவன் ஆகி விடலாம் என்ற மலிவுவிலை அரசியலை மேற்கொள்ளக்கூடிய அனைவருக்கும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தோம். இதுபோன்று பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தை ஆண்ட முன்னாள் முதல்வர்களுக்கு நினைவிடம் கட்ட 20 கோடி 50 கோடி என ஒதுக்கக்கூடிய அரசாங்கம், தமிழ் சமுதாயத்தினுடைய அடையாளமாக இருக்க கூடிய மாமன்னர் ராஜ ராஜனுக்கு திருக்கோயில் கட்டாதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

உடையாளூர் ராஜராஜசோழன் நினைவிடத்தை உலகறியச் செய்ய உறுதியேற்ற அனைத்து சிவனடியார்களின் எண்ணங்கள் நிறைவேற எல்லாம் வல்ல சிவபெருமானை , மாமன்னர்
ராஜராஜ சோழனும் மனதார எங்களை வழிநடத்த வேண்டும் என்று பிரார்த்தனையோடு , மனநிறைவோடு இன்று உடையாளூரில் இருந்து திரும்பினோம்.

திருவாசக முற்றோதல் நடத்தக்கூடிய சிவநெறியை பரப்பக்கூடிய சிவநெறி தொண்டர்கள் ஒவ்வொரு மாதமும் சதய நட்சத்திர தினத்தன்று உடையாளூரில் ஒன்றிணைவோம்.

மாமன்னன்
ராஜராஜ சோழனுக்கு பெரிய அளவில் திருக்கோயில் கட்ட எண்ணத்தால் வழிபாடு செய்து எடுத்த காரியம் வெற்றி பெற அனைவரும் வேலை செய்வோம்.

இன்றைய வழிபாட்டு பூசை நிகழ்வுகளுகுரிய கூறிய அனைத்து ஏற்பாடுகளையும் இந்து தமிழர் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை திரு சன் சிவா
செய்திருந்தார்.

உடன் மாவட்ட அமைப்பாளர்
திரு பால குமார்,

கும்பகோணம்
இந்து இயக்க மூத்த பிரமுகர் திரு பாலு அவர்கள்,

பட்டுக்கோட்டை
ஜி வெங்கடேஷ் அவர்கள்
திரு செந்தில்குமார் ஆலங்குடியை சார்ந்த சிவனடியார்கள் இறைநெறி தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

இராம இரவிக்குமார்
நிறுவனதலைவர்
இந்து தமிழர் கட்சி
86430-81430

Latest Posts

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

கோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்

நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...

Don't Miss

வறுமையின் உச்சம் தள்ளாடும் வயதிலும் தளராமல் சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது மூதாட்டி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பக் கலையை வெளிப்படுத்தி ரோட்டோரம் பிச்சையெடுப்பது காண்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது. கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம்...

ரூ.100 லஞ்சம் தரமறுத்த சிறுவன் முட்டை வண்டியைத் கவிழ்த்துவிட்டு அதிகாரிகள் அட்டூழியம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், லஞ்சம் கொடுக்காத சிறுவனின் முட்டை வைத்து இருந்த தள்ளுவண்டியை, மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்ந்ததில் அதில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து நாசமாகின.

குழந்தை கடத்த முயன்றவர் மீது ஒரு புலியை போல் பாய்ந்த தாய்…

டெல்லி ஷகர்புர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த, டிப்டாப் ஆசாமிகள் இருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

பின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...

முசிறி அருகே கண்டெடுக்கப்பட்ட பழமைவாய்ந்த பீரங்கி குண்டு!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மண்பறை என்ற கிராமத்தில், மிகப்பழமை வாய்ந்த பீரங்கி குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 7 கிலோ எடை கொண்ட கல்லாலான உருண்டை...