ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவன் ரியாஸ் நாய்கூ  சுட்டு கொலை.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி ரியாஸ் நாய்கூ சுட்டுக் கொல்லப்பட்டார். இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் நடந்த தாக்குதலில் கர்னல் மற்றும் மேஜர் போன்ற முக்கிய அதிகாரிகள் உட்பட 8 பேர் வீர மரணமடைந்தனர். 

இந்த நிலையில் செவ்வாய் இரவு புல்வாமா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய படைத்தளபதி ரியாஸ் நாய்கூ பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ரியாஸ் நைக்கூவை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், ரியாஸ் நாய்கூ சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட ஹிஸ்புல் பயங்கரவாதி காஷ்மீரில் மிகவும் தீவிரமாக இயங்கி வந்தவன். பல ஆண்டுகளாக கடத்தல், பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளான். நேற்றிரவு நடந்த நடவடிக்கையில் நாய்கூவின் மெய்க்காப்பாளரும் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*