இன்டர்நெட் எப்படி வேலை செய்கிறது. பகுதி-1

Computer

இன்டர்நெட் எப்படி வேலை செய்கிறது. பகுதி1

வயர்கள்:

நாம் லேப்டாப்பில் கூகிள் chrome உபயோகித்து ஒரு வெப்சைட்டுக்கு போக என்ன செய்கிறோம்?

பிரௌசரில், உதாரணத்திற்கு விகடன் வலைதளத்திற்கு சென்று பத்திரிக்கைகளை படிக்க வேண்டும் என்று எண்ணினால், இந்த வெப்சைட் முகவரியை www.magaram. in டைப் அடித்து அந்த வலைதளத்திற்கு செல்கிறோம். ஆனால் இது எப்படி டைப் அடித்தவுடன் நம் ப்ரௌசெரில் இந்த வலை தளம் வருகிறது என்பதை நாம் யோசிப்பதில்லை. மற்றவர்கள் சரி, ஆனால் web developer ஆக முயற்சிக்கும் நீங்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இன்டர்நெட் வெறும் வயர் தான். ஆமாம், கடல்கள் கடந்து, பல்வேறு தேசங்களுக்குள் சென்று நம் இல்லம் வரையில் இன்டர்நெட் connection வருகிறது அல்லவா? அத்தனையும் வயர்கள் தான்.

பல தேசத்தினை இணைக்கும் இன்டர்நெட் கடல் மார்கமாக, கடலுக்கு அடியில் optical fibre இழைகளாக செல்கிறது. அப்படி செல்லும் இழைகளை, அந்த தேசத்தினுள் உள்ள ISPகள் (Internet Service Providers) connect செய்வார்கள். அதன் பின் இந்த ISP பல்வேறு இல்லங்களுக்கும், அலுவலகங்களுக்கும் இன்டர்நெட் connection கொடுப்பார்கள். இங்கேயும் வயர்கள் தாம். காப்பர் வயர்களாக இருந்ததை இப்போது optical fiber இழைகளாக மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.

சரி வெறும் வயர்கள் மட்டும்தான் இன்டர்நெட்டா என்று கேட்டால், அவைகள் தான் நாம் இன்டர்நெட் மூலமாக அனுப்பும் தகவல்களை சுமந்து செல்லும் பாதைகளாக இருக்கின்றது. அதனால் தான் முதலில் இதை பற்றி சொன்னேன்.

சர்வர்கள்:

நாம் ஒரு வலைதளத்தை உருவாகினால், எங்காவது ஒரு இடத்தில் அதை சேமித்து, பின் இந்த இடத்தில்தான் இந்த வலைத்தளம் இருக்கிறது என சொன்னால் தான் நம்மால் அந்த வலைததிற்கு போக முடியும்? அப்படி உலகில் உள்ள எல்லா வலைதளங்களும் கோடான கோடி சர்வர்கள் எனப்படும் அதிக சக்தி வாய்ந்த கணினிகளில் தான் உள்ளது. இந்த சர்வர்கள் இன்டர்நெட்டில் இணைக்கப்படும், இப்படி இணைக்கப்படும் சர்வர்களின் பாதுகாப்பிற்காக, கண்டவன் உள்ளே நுழைந்சிட கூடாது இல்லையா? வீட்டுக்கு வாசல்ல இருக்கும் கேட் போல, சர்வர்களுக்கு firewall எனப்படும் மென்பொருள் இருக்கும். சரியான அழைப்புகளை உள்ளே அனுப்பி, தவறான அழைப்புகளை தடுத்து இவைகள் பாதுகாப்பு வேலைகளை கச்சிதமா செய்யும். ஒரு காலத்தில் இவைகளும் hardwareகளாக இருந்த நிலை மாறி இன்று இவைகளும் மென்பொருளாக மாறிவிட்டன. இந்த firewall மட்டுமே ஒரு மிக பெரிய சப்ஜெக்ட். ஆனால் நமக்கு இப்பொழுது தேவை இல்லை. இப்படி ஒன்று இருக்கிறது, அது இன்ன வேலை செய்கிறது என்று தெரிந்தால் மட்டும் போதும்.

ஏம்பா, இன்டர்நெட் வயர் இருக்கு, சர்வர் இருக்கு, பாதுகாப்புக்கு firewall இருக்கு. ஆனா, எந்த வெப்சைட் எந்த சர்வர்ல இருக்குன்னு எப்படி என் ப்ரௌசெருக்கு தெரியும்?

நல்ல கேள்வி, அடுத்த தலைப்பு இதை பத்தி தான்.

ஐபி அட்ரஸ், டொமைன் நேம்:

ஒவ்வொரு இண்டர்நெட்ல இணைந்திருக்கும் கணினிக்கும் ஒரு முகவரி இருக்கும். அந்த முகவரியே ஐபி அட்ரஸ் என அழைப்பார்கள். இப்பொழுது நாம் டைப் அடித்துக்கொண்டிருக்கும் என் லேப்டாப்க்கு ஒரு ஐபி அட்ரஸ் இருக்கும். அதே போல ஒவ்வொரு சர்வருக்கும் ஒரு ஐபி அட்ரஸ் இருக்கும். நம் கைரேகைகள் மாதிரி இவைகள் unique ஆக இருக்கும். ஒரு கணினிக்கு கொடுத்த ஐபி அட்ரஸ் இன்னொரு கணினிக்கு கொடுக்க மாட்டார்கள்.

இந்த ஐபி அட்ரஸ் எப்படி இருக்கும்?

உங்களுக்கு உதாரணம் காட்ட வேண்டும் என்பதால் google வெப்சைட்டின் ஐபி அட்ரசை இங்கே கொடுக்கிறேன்.

172.217.166.110

ஆம் இப்படித்தான் நம்பர்களாக இருக்கும். ஐபி என்பதன் முழு பெயர் இன்டர்நெட் ப்ரோடோகால்,

இந்த நம்பர் தான் google இன் முகவரி.

இப்படிதான் ஒவ்வொரு வலைதளத்திற்கும் ஐபி முகவரி இருக்கும். பிரச்சனை வராமல் unique ஆக இவைகளை எல்லோர்க்கும் அளிப்பது உலகம் முழுதும் இந்த கம்பெனி தான் Internet Assigned Numbers Authority.

இதுவும் மிகப்பெரிய சப்ஜெக்ட், இப்போதைக்கு இவ்வளவு தெரிந்தால் போதும்.

இந்த மாதிரி நம்பர்கள் மட்டும் இருந்தால், நம்மால் இவ்வளவு எளிதாக ஒரு வெப்சைட் முகவரியை நியாபகம் வெச்சுக்க முடியுமா? நிச்சயமா முடியாது. அதனால தான் ஒவ்வொரு ஐபி அட்ரசையும் ஒரு மனிதர்கள் படிக்கும்படியான ஒரு பேருடன் இணைத்தார்கள். இந்த பெரும் unique தான்.

172.217.166.110 -> www.google.com எனும் பேருடன் இணைத்தனால் தான் நம்மால் வெகு சுலபமாக google.com என டைப் அடித்து அந்த தளத்திற்கு போக முடிகிறது.

இதை தான் டொமைன் நேம் என்று அழைப்பார்கள்.

எல்லாம் சரி சார். தகவல் பரிமாற்றம் எப்படி நிகழ்கிறது?

தகவல் பரிமாற்றம்:

இப்படித்தான் நடக்கிறது தகவல் பரிமாற்றம்.

நான் google வெப்சைட்க்கு போக ப்ரௌசெரில் அந்த வலைதள அட்ரஸ் கொடுத்த உடன். இந்த தகவல், என் லேப்டாப் இன்டர்நெட்டில் இணைத்திருப்பதால், இந்த ஐபி அட்ரசில் உள்ள client, ஆம் சர்வர் இல்லாத அனைத்து கணினியும், மொபைலும், டாபும், client தான், இந்த வலைதளத்தை கோருகிறார் என்று நம் ISPக்கு தகவல் சொல்லும் நம் ப்ரௌசெர். நம் ISP நாம் கோரியிருக்கும் வலைதளத்தின் டொமைன் நேம் மூலம், அதன் ஐபி முகவரியை கண்டுபிடித்து, அந்த ஐபி எங்கே, எந்த தேசத்தில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து, நம் ப்ரௌசெரின் தகவலுக்கு மேல் தன்னுடைய ஐபி மற்றும் வேறு சில தகவல்களை இணைத்து அனுப்பும்.

இப்படி அனுப்பப்படும் தகவல்களை பாக்கெட் (packet) என்பார்கள். வெகு தூரம் செல்லவேண்டியிருக்கிறது இல்லையா? வழியில் தொலைந்து போகாமல் இருக்க வேண்டி, இது போகும் வழியெல்லாம் ரௌட்டர் எனும் மென்பொருள்கள் பல சர்வர்களில் நிறுவப்பட்டிருக்கும். அவைகள் ஒவ்வொன்றும் நம் தகவல் google வலைத்தளம் இருக்கும் சர்வர் வரை கொண்டு சேர்க்கும். ஆனால் ஒவ்வொரு ரௌட்டரும் நம் தகவல் மேல் தன்னுடைய தகவலை இணைக்கும். இப்பிடி இணைத்து இணைத்து போய் google இருக்கும் சர்வரின் firewallஇடம் போய் சேர்க்கும்.

அந்த firewall என்ன செய்யும் தெரியுமா?

இப்படி வந்த தகவல் தொகுப்பை மொத்தமாக ஆராய்ந்து, யாரும் இடையில் புகுந்து தேவையில்லாத, அல்லது பொய்யான, அல்லது ஆபத்தான தகவலை சேர்த்துள்ளர்களா என சரி பார்த்து, நம் தகவல் தொகுப்பு சரியாக இருப்பின், அந்த சர்வருக்குள் நம் தகவல் தொகுப்பை அனுமதிக்கும்.

அங்கே உள்ள webserver எனும் மென்பொருள், இந்த தொகுப்பை பிரித்து நாம் கேட்கும் வெப்சைட் தன்னிடம் இருப்பின், அந்த தகவலை மொத்தமாக எடுத்து திரும்ப அனுப்பும். அப்படி வலைத்தளம் இல்லை என்றால் என்னிடம் இல்லை என்ற தகவலை அனுப்பும்.

திரும்ப மொத்த தகவல்தொகுப்பையும், இந்த முறை, வெப்சைட் பைல்ஸ்களோட திரும்ப வந்த வழியே நம் லேப்டாப்பில், ப்ரௌசெரில் வந்து சேரும். நம் ப்ரௌசெரும் வரும் வலைதள பைல்ஸ்ஐ எப்படி பிரித்து நமக்கு காட்டும்.

எப்படி பிரித்து, காட்டுகிறது என்பதை இன்னொரு அத்தியாதத்தில் பாப்போம். இது ரொம்ப முக்கியம்.

ஆனால் திரும்ப வரும் போது, இந்த வழியாகத்தான் வந்தோம் என எப்படி அந்த தகவல் தொகுப்புக்கு தெரியும்?

அவைகள் ஒவ்வொரு ரௌட்டராக வரும் போது, தகவல் தொகுப்பை பிரித்து, அடுத்த ரௌட்டர் எது என பார்த்து, அதுக்கு அனுப்பும். எப்படி ஒவ்வொன்றாக எப்படி தன்னை பத்திய தகவலை சேர்த்து அனுப்பியதோ, அப்படியே திரும்ப வரும்போது
ஒவ்வொன்றாக பிரித்து பார்த்து சரியான வழியில் அனுப்பி நம் கணினிக்கு அனுப்பி விடும்.

இப்படித்தான் இன்டர்நெட் வேலை செய்கிறது.

நான் ரொம்ப simplify பண்ணி சொல்லியிருக்கிறேன். இதில் நான் சொன்ன ஒவ்வொரு விஷயமும், தனி சப்ஜெக்ட்கள், இதற்கென வல்லுனர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் நம் குறிக்கோள் web developer ஆக வளர்வது, இந்த குறிகோளுக்கு, இவ்வளவு தகவல் போதும்.

நாளை எப்படி ஒரு ப்ரௌசெர் வேலை செய்கிறது என்பதை பாப்போம். அதன் பிறகு http ப்ரோடோக்கால் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்த்துவிட்டு அப்புறம் HTML5 எனும் மொழியை கற்க ஆரம்பிக்கலாம்.

படியுங்கள், பகிருங்கள், எங்கள் பக்கத்தை விரும்புங்கள், விரும்ப சொல்லுங்கள்.

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய whatsapp number
+91 8778723474

நன்றி: அனுஷம் ஸ்ரீராம்

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*