தமிழ்நாட்டின் கலாசாரம் மற்றும் உணவு முறைகள் சுத்தமாக பிடிக்காது ஆனால் பாகிஸ்தான் அருமை: நவ்ஜோத் சிங் சித்து அனாவசிய பேச்சு

-க. விஜய் ஆனந்த்

இம்ரான்கான் பதவியேற்பு விழாவிற்குச் சென்று அவரைக் கட்டிப்பிடித்து வாழ்த்துச் சொல்லிய சர்ச்சை தீயாக எரிந்துகொண்டிருக்கும் நிலையில், சித்து, தமிழகத்தை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுத் தன் வாயாலேயே அதை ஊதிப்பொரிதாக்கியிருக்கிறார்.

“தமிழகத்தின் என்னால் நீண்ட நாள் வாழமுடியாது, வணக்கம் தவிர வேறு எந்த வார்த்தைகளும் புரியாது. இட்லி தவிர அங்கே வேறெதையும் உண்ணவும் முடியாது..” என்று மட்டும் சொல்லியிருந்தால், அதில் தவறு இல்லை தான். ஏனென்றால், ஒரு பஞ்சாபியாக தமிழ் தெரியாததிலும் , தமிழக உணவுப்பழக்கம் ஒத்துக்கொள்ளாமல் போவதிலும் வியப்பேதுமில்லைதான்.

ஆனால், மொழியோ உணவோ ஒத்துப்போகவிட்டாலும், தமிழகம் என்பது இந்தியாவின் ஒரு மாநிலம், ஒரு அங்கம்.

அப்படி இருக்கும் போது, ” பாகிஸ்தானில் அப்படி அல்ல, அங்கே பஞ்சாபி பேசுகிறார்கள், பஞ்சாபி கலாச்சாரத்துடன் ஒத்துப்போகிறது. அங்கே எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழலாம்..” என்று பேசியிருக்கின்றார் சித்து.

இந்தப் பேச்சின் மூலம், தமிழகத்தை சிறுமைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, இந்தியாவையே சிறுமைப்படுத்தியிருக்கிறார்.

சக இஸ்லாமிய நாடுகளே , தீவிரவாதத்தை விட்டொழிந்து, இந்தியாவுடன் இணக்கமாகச் செயல்பட முன்வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் மீது நேரிடையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து தீவிரவாதத்தை ஏவிக்கொண்டு, இன்றைய தேதியில், சர்வ தேச தீவிரவாதத்தின் தலைநகராய் திகழ்ந்து கொண்டிருக்கும் பாகிஸ்தானை , பஞ்சாப்புடன் ஒப்பிடுவதன் மூலம், பஞ்சாபையும் சிறுமைப்படுத்தியிருக்கிறார்.

இதன் மூலம் , பஞ்சாபில் முற்றிலும் ஒடுக்கப்பட்ட தீவிரவாதம் , பாகிஸ்தானில் நிலவுவது போல மீண்டும் தலையெடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரா..?

பேசாத்தெரியாமல் பேசினாரா..? அல்லது காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு இந்திய இறையாண்மைக்கு ஊறு செய்ய திட்டமிட்டு வன்மங்களை விதைக்கிறாரா..?

மொத்தத்தில், தனது நாட்டுக்கும், நாட்டின் சக மாநிலத்திற்கும் மட்டுமின்றி தனது சொந்த மாநிலத்திற்கும் சேர்த்து தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறார், சித்து.

Please follow and like us:

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*