Tuesday, November 29, 2022

இந்தியாவில் புதிதாக 43 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா

புதுடெல்லி,நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும்கூட, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து கிட்டத்தட்ட 43 ஆயிரம் என்ற அளவை (சரியாக 43 ஆயிரத்து 846)...

Latest Posts

திருக்கோஷ்டியூர் கோவில் விமானத்திற்கு தங்கத்தகடு: ஸ்டாலின் மனைவி

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா இன்று துவக்கி வைக்க இருக்கிறார்.

அண்ணாமலையின் இண்டெலிஜென்ஸ்.. கடுப்பான ஸ்டாலின்..!

தமிழக சட்டமன்றத்தை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து மாமல்லபுரத்துக்கு மாற்றும் பணிகளில் திமுக அரசு இறங்கியுள்ளதாகவும், இதற்காக அங்கு 6000 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, புதிய சட்டமன்றத்தை அமைக்கும் வேலைகளை...

நொடி பொழுதில் மகளை காப்பாற்றிய தந்தை!!!

தந்தை என்பவன் உயிர் கொடுப்பவன் மட்டுமல்ல உயிர் காப்பவனும் கூட… நொடி பொழுதில் சூப்பர் மேனாக மாறி மகளை காப்பாற்றிய தந்தை. இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில்...

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் 2-வது டவர் பிளாக்கின் பின்புறம் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் இன்று காலை சுமார் 11 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதனைத்...

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க என் கடைசி உயிர் மூச்சு உள்ளவரை போராடுவேன் : வசீம் ரிஸ்வி

புதுடெல்லி

வசீம் ரிஸ்வி   சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

இந்த வசனங்கள் “பயங்கரவாதம், வன்முறை, ஜிஹாத் ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன” என்றும் அவை  உண்மையான  குர்ஆனின் ஒரு பகுதியாக இல்லை, ஆனால் பின்னர் ஒரு காலத்தில் செருகப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனை அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவுலானா வாலி ரஹ்மானி  ரிஸ்வி  விளம்பரத்திற்காக இதனை செய்து உள்ளதாக கூறினார்.


மஜ்லிஸ்-இ-உலமா-இ-ஹிந்தின் பொதுச் செயலாளர் மவுலானா கல்பே ஜவாத், ரிஸ்விக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். லக்னோவின் பரா இமாம்பராவுக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை குர்ஆனைப் பாதுகாப்பதற்காக ஒரு அரங்கையும் ஏற்பாடு செய்தார். வசீம் ரிஸ்வியின் தலையைகொண்டு  வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசு தருவதாக கடந்த 13-ம் தேதி அமீருல் ஹசன் ஜாப்ரி என்பவர் அறிவித்துள்ளார். அமீருல் ஹசன், உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆவார். இந்நிலையில், அமீருல் ஹசன் மீது மொராதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


இது குறித்து மொரதாபாத் மாவட்ட ஏஎஸ்பி  அமீத் குமார்ஆனந்த் கூறும்போது, ‘இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்கி பகையை வளர்க்கும் வகையில் வழக்கறிஞர் அமீருல் ஹசனின் வீடியோ உள்ளது. இதற்கான சாட்சியங்கள் கிடைத்தவுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார்.
இந்த் நிலையில் ஷியா வக்ஃப் குழுவின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி ஒரு வீடியோவில்  குர்ஆனின் 26  வசனங்களை அகற்றுவதற்கான போரில் தனது கடைசி மூச்சு வரை போராடுவேன். 

எனது மனைவி, குழந்தைகள், சகோதரர் மற்றும் உறவினர்களால் நான் வெளியேற்றப்பட்டேன். ஆனால் எனக்கு கவலையில்லை. நான் சரியான பாதையில் தான் இருக்கிறேன், கடைசி மூச்சு வரை இந்த போரில் போராடுவேன். நான் தற்கொலை செய்து கொள்வேன் (sic) ஆனால் விட்டு கொடுக்க மாட்டேன், ”என்று ரிஸ்வி கூறி உள்ளார்.

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி உத்தரபிரதேச ஷியா மத்திய வக்புவாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்துள்ள மனு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Latest Posts

திருக்கோஷ்டியூர் கோவில் விமானத்திற்கு தங்கத்தகடு: ஸ்டாலின் மனைவி

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா இன்று துவக்கி வைக்க இருக்கிறார்.

அண்ணாமலையின் இண்டெலிஜென்ஸ்.. கடுப்பான ஸ்டாலின்..!

தமிழக சட்டமன்றத்தை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து மாமல்லபுரத்துக்கு மாற்றும் பணிகளில் திமுக அரசு இறங்கியுள்ளதாகவும், இதற்காக அங்கு 6000 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, புதிய சட்டமன்றத்தை அமைக்கும் வேலைகளை...

நொடி பொழுதில் மகளை காப்பாற்றிய தந்தை!!!

தந்தை என்பவன் உயிர் கொடுப்பவன் மட்டுமல்ல உயிர் காப்பவனும் கூட… நொடி பொழுதில் சூப்பர் மேனாக மாறி மகளை காப்பாற்றிய தந்தை. இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில்...

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் 2-வது டவர் பிளாக்கின் பின்புறம் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் இன்று காலை சுமார் 11 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதனைத்...

Don't Miss

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க என் கடைசி உயிர் மூச்சு உள்ளவரை போராடுவேன் : வசீம் ரிஸ்வி

புதுடெல்லிவசீம் ரிஸ்வி   சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- இந்த வசனங்கள் "பயங்கரவாதம், வன்முறை, ஜிஹாத் ஆகியவற்றை...

தனது நாட்டில் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டால் தான் சீனா வர விசா வழங்கப்படும் : சீனா அறிவிப்பு

பீஜிங்: சீனாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட 4 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சீன தடுப்பூசிகளை துருக்கி, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் வாங்கி உள்ளன. இந்நிலையில், தற்போது கொரோனா...

26-ந்தேதி வங்காளதேச பயணத்தின்போது பிரதமர் மோடி 2 இந்து கோவில்களுக்கு செல்கிறார்

டாக்கா, வங்காளதேசத்தின் சுதந்திர தின பொன்விழாவும், வங்காளதேசத்தை நிறுவிய ‘வங்கபந்து’ ஷேக் முஜிப்பூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவும் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம், இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

நோய் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல் எந்த கூட்டங்களும் நடத்த கூடாது: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500க்கும் குறைவாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தற்போது ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்டு இயல்பு...

தினேஷ் குண்டுராவ் பேட்டி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் நாராயணசாமி போட்டியிட மாட்டார்

புதுச்சேரி,தமிழகத்துடன் சேர்ந்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில் ஏனாம் தொகுதிக்கு...