Saturday, August 15, 2020

சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? விரக்தியில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளிக்கப்பட்ட புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னையில் சிக்னல் கம்பம் : வாகன ஓட்டிகள் வரவேற்பு!!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சென்னை காமராஜர் சாலையில் சோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது சென்னை போக்குவரத்து துறை. தமிழகத்தின் தலைநகரான...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

கோவில் என்றால் கூச்சல் மசூதி என்றால் மெளனம்

திராவிடர் கழக தலைவர்
திரு கி.வீரமணி அவர்களுக்கு
இந்து தமிழர் கட்சி சார்பில் கண்டணம்.

இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மழை வேண்டி யாகம் நடத்த உத்தரவு.

இந்து சமய அறநிலையத்துறை புரோகித துறை அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் திரு கி வீரமணி அவர்கள் கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ள உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கணைகள் குவியட்டும் என்று நீண்ட நெடிய அறிக்கையை கொடுத்திருக்கிறார்.

“இந்து சமய அறநிலையத்துறை என்பது தணிக்கைத் துறையை தவிர; புரோகிதர் துறை அல்ல .”

மழை பெய்வதற்கு மழைபொய்ப்பதற்கும் காரணங்களை மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கூட அறியும்
இதை ஆணையர் பணிந்த ரெட்டி அவர்கள் அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று கூறுகிறார்.

யாகத்தாலும் பூஜைகளாலும் காரியம் ஆகும் என்றால்
ஆட்சியே தேவையில்லையே; அலுவலகங்களை எல்லாம் கோயில்கள் ஆக்கி அலுவலர்களை பூசாரி ஆக்கிவிடலாமே.

ஒரு மதசார்பற்ற அரசு மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற இந்திய அரசு அமைப்பு சட்டத்துக்கு 51 ஏ (ஹெச்) எதிரானது.
இது சட்டத்தை மீறும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

மதசார்பின்மையை சின்னாபின்னமாக்கி உள்ளனர் .

அண்ணா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நிலையில் அரசு அலுவலகங்களில் வளாகங்களில் எந்த வழிபாட்டுச் எண்ணங்களும் இருக்கக்கூடாது என்று சுற்றறிக்கை ஆணை பிறப்பித்தது கூட அண்ணா பெயருடன் ஆட்சிக்கு தெரியாத வெட்கக்கேடு.

அச்சட்டம் எப்படி
ஏன் வந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு கண்டன கணைகள் குவியட்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

திராவிட கழக தலைவர்
திரு கி. வீரமணி அவர்களுக்கு சில கேள்விகளை முன்வைக்கிறோம்.

1.தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக இயற்கை பொய்த்தாலும்
கூட இறை நம்பிக்கையால், கூட்டு பிரார்த்தனையால் பல அதிசயங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்துமத நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை.

இதை கொச்சைப்படுத்தி பேசக்கூடிய திரு வீரமணி அவர்களுக்கு
இந்து தமிழர் கட்சியின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
” இந்து சமய அறநிலையத்துறை என்பது தணிக்கைத் துறையை தவிர ;
அது புரோகிதர் துறை அல்ல என்று கருத்து தெரிவிக்கிறார்.

அப்படியானால் முன்னாள் முதல்வர் சி.என்.
அண்ணாதுரை நினைவு நாளுக்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கோயில்களில் எல்லாம் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை பணத்தில் இருந்து அன்னதான சோறு போடப்படுகிறது.

இது தவறான நடவடிக்கை இந்து சமயக் கோயில்களில் அண்ணாதுரை நினைவு நாளுக்கு அன்னதானம் கூடாது என்று என்றாவது ஒருநாள் இந்த வீரமணி கண்டணம் தெரிவித்தாரா ?

 1. எல்லா அரசு அலுவலகங்களிலும் யாகம் நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கவில்லை. இந்த சமய திருக்கோயில்களில் தானே யாகம் நடத்த உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். இதில் என்ன தவறு வந்தது ?
  இவ்வளவு பொங்கியெழ கூடிய மதசார்பற்ற அரசு என்றெல்லாம் சொல்லக்கூடிய வீரமணி அவர்கள்
  இஸ்லாமியர்களுக்கு நோன்பு கஞ்சி குடிப்பதற்கு ரம்ஜான் நோன்பிற்கு கிட்டத்தட்ட 11 கோடி ரூபாய் அளவில் சுமார் 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி
  தமிழக அரசு
  கொடுத்தபோது
  வாய் திறக்காமல் மௌனமாக இருந்தது ஏன்?

“மசூதிக்கு என்றால் மௌனம்
கோயில் என்றால் பெரும் கூச்சல்!”

 1. அரசு அலுவலக வளாகங்களில் கோவில்கள் கூடாது என்று சொல்லும் திரு வீரமணி அவர்களே அரசினுடைய பொது பயன்பாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை கோவில் வருமானங்களை பயன்படுத்த கூடாது என்று சொல்ல துணிச்சல் உண்டா?

4.அரசு அலுவலக வளாகங்களில் கோவில்கள் வேண்டாம் என்று சொல்லக்கூடிய இதே உரிமை அரசு அலுவலக வளாகங்களில் இருக்கக்கூடிய அண்ணாதுரை பெரியார் சிலைகளை வைப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது .
இதை அகற்ற வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம் இதை வீரமணி ஆமோதிப்பாரா?

5.மூட நம்பிக்கை இல்லாது பகுத்தறிவோடு வாழக் கூடிய கொள்கை வீரர் வீரமணி அவர்கள்
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் சமாதிகள் வடை வைத்து சாப்பாடு வைத்து பஜனைகள் பாடி, பிணத்திற்கு கூட முரசொலி வைத்து புதைத்தபோது ; பகுத்தறிவையும் சேர்த்துப் புதைத்த போது எங்கு சென்று இருந்தார் இந்த வீரமணி?

 1. இந்து சமய அறநிலையத்துறை என்பது தணிக்கை துறைதான் என்று சொல்லக்கூடிய திரு கி வீரமணி அவர்கள் இஸ்லாமியருடைய வழிபாட்டுத்தலத்தை முஸ்லிம் தணிக்கை துறைக்கும் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்களை கிறிஸ்தவ தணிக்கைத் துறைக்கு ,
  அதாவது அறநிலையத்துறை போல அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று
  கோரிக்கை வைக்க
  இதுநாள் வரை திருவாய் திறக்காதது ஏன்?
 2. தஞ்சை மாவட்டம் வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி ஒரு பெருமாள் கோவில் சொத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இதற்கு வீரமணி அவர்களுடைய
  பதில் என்ன?
 3. இந்து சமய அறநிலையத்துறை என்கின்ற பெயரை தமிழ்நாடு அறநிலையத்துறை என்று பெயர் மாற்ற வேண்டும் என்று நாத்திக புரோகித அதிகாரிகளால் கோரிக்கை வைத்தபோது ஆதரித்தவர் தானே
  நீங்கள்.
  தற்போது ஆன்மீகம் செழிக்கவேண்டும் தமிழகத்தின் நீர் தேவை பூர்த்தி ஆக வேண்டும் என்று இறை நம்பிக்கையுடைய ஆணையர் சொல்லும்போது ஆத்திகப் புரோஹிதர் என்று அவதூறு பரப்புவது எப்படி?

ஒரு பொது நோக்கத்திற்காக தமிழகத்தின் நலத்திற்காக நடத்தக்கூடிய யாகத்தில் கூட
அற்ப பகுத்தறிவு அரசியல் நடத்தக்கூடிய
கிவீரமணியின் புத்தி மட்டரகமானது ; கேவலமானது .

இதை
இந்து தமிழர் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம்.

இந்துசமய
அறநிலையத்துறை சார்பில் மழைவேண்டி நடத்தக்கூடிய யாகங்களில்,
கூட்டு வழிபாடுகளில் பக்தர்களும் பொதுமக்களும் தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு கலந்துகொள்ள இந்து தமிழர் கட்சியின் சார்பில் வேண்டுகோள்முன் வைக்கிறோம்.

இராம .இரவிக்குமார்
நிறுவனதலைவர்
இந்து தமிழர் கட்சி
8643081430

Latest Posts

ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னையில் சிக்னல் கம்பம் : வாகன ஓட்டிகள் வரவேற்பு!!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சென்னை காமராஜர் சாலையில் சோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது சென்னை போக்குவரத்து துறை. தமிழகத்தின் தலைநகரான...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

Don't Miss

விமானத்தில் ஒலித்த தமிழ் குரல், அசத்தும் சென்னை ராயபுரம் பைலட் ப்ரியாவிக்னேஷ்..!

விமானத்தில் தகவல்களை தெளிவான தமிழில் அறிவித்த ஒரு விமானி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார் நமது ராயபுரத்தை சேர்ந்த ப்ரியாவிக்னேஷ். சென்னையில்...

வறுமையின் உச்சம் தள்ளாடும் வயதிலும் தளராமல் சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது மூதாட்டி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பக் கலையை வெளிப்படுத்தி ரோட்டோரம் பிச்சையெடுப்பது காண்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது. கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம்...

ரூ.100 லஞ்சம் தரமறுத்த சிறுவன் முட்டை வண்டியைத் கவிழ்த்துவிட்டு அதிகாரிகள் அட்டூழியம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், லஞ்சம் கொடுக்காத சிறுவனின் முட்டை வைத்து இருந்த தள்ளுவண்டியை, மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்ந்ததில் அதில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து நாசமாகின.

குழந்தை கடத்த முயன்றவர் மீது ஒரு புலியை போல் பாய்ந்த தாய்…

டெல்லி ஷகர்புர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த, டிப்டாப் ஆசாமிகள் இருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

பின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...