கள்ளக்குறிச்சி மாவட்டம் லட்சியம் என்ற கிராமத்தை சேர்ந்த மனோஜ் என்ற இளைஞர் சவூதி அரேபியாவிற்கு ஓட்டுநர் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, முதல் 2 மாதத்திற்கு மட்டும் ஓட்டுநர் வேலை கொடுத்துவிட்டு. அடுத்து அவரை கொத்தடிமை ஆக்கி அவருக்கு பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலையை கொடுத்ததால் அந்த இளைஞர் பெற்றோருக்கு போன் செய்து தன்னை காப்பாற்றும்படி கதறும் வீடியோ வைரலாகி வருகிறது.
தார்ப்பாய் போன்ற உடையை கொடுத்தும், மூச்சுவிட சிரமப்படும் பாலைவனத்தில் சோறு கொடுக்காமல் வெறும் பண் மட்டுமே தின்ன கொடுத்து வருவதாக மனோஜ் கூறுகிறார். அங்கே இருக்கும் முதலாளி மனோஜை கொத்தடிமையாக்கி அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
குடும்ப வறுமையை போக்க பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெளிநாட்டு ஆசையில் ஏமாற்றப்பட்டு இன்று கொத்தடிமையாக்கி ஒட்டகம் மேய்க்க வைக்கப்படுகின்ற சூழ் நிலைக்கு தள்ளப்பட்ட டிப்ளமோ இன்ஜினியர் மனோஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சவுதி அரேபியாவில் போராடி வருகின்ற பரிதாப நிலை உள்ளது.