இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ‘டை’யில் (சமன்) முடிந்தது

-Venkat Ramanan

விசாகப்பட்டினம்:

இன்று விசாகப்பட்டினத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகள் எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. அதை பின்தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியும் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் எடுத்தார். ஷிம்ரன் ஹெட்மயர் 94 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 157 ரன்களும், அம்தி ராயுடு 73 ரன்களும் எடுத்தனர் .

விராட் கோலி உலக சாதனை!!!

மிகக்குறைந்த ஆட்டத்தில் 205 விளையாடி 10,000 ரன்களை கடந்து உலக சாதனை!!!

இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன் 81 ரன்கள் எடுத்தால் 10,000 கடக்க முடியும் என்ற நிலையில் இருந்த கோஹ்லி ஆட்டமிழக்காமல் 157 ரன்கள் எடுத்தார். இது விராட் கோஹ்லி ஆடிய 205வது ஆட்டம் ஆகும்.

இந்த ஆட்டத்தின் முடிவில் அவரது சராசரி ஒரு இன்னிங்சுக்கு 59.64 ரன்களாக இருக்கிறது

முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 259வது இன்னிங்சில் விளையாடி10,000 ரன்கள் கடந்ததே இதற்கு முந்தைய விரைவான சாதனையாக இருந்தது. அதனை இன்று கோஹ்லி முறியடித்துள்ளார் . அவர் இதே வேகத்தில் சென்றால் இன்னும் பல சாதனைகள் செய்வார் என்று எதிர்பார்க்கலாம் .

Please follow and like us:

3 Comments

Leave a Reply

Your email address will not be published.


*