காஷ்மீரில் பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம்; பிரதமர் மோடி இரங்கல்

Indian Army

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான தாக்குதலில் கர்னல், மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீர் காவல்துறை துணை கமிஷனர் என மொத்தம் 5 பேர் வீர மரணம் அடைந்தனர். லஷ்கர் பயங்கரவாதி கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவுஹண்ட்வாராவில் வீரமரணம் அடைந்த நமது தைரியமான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். . அவர்களின் வீரம் மற்றும் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது. அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு பாடுபட்டதுடன், நமது மக்களை பாதுகாக்க அயராது உழைத்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவி இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள வடக்கு காஷ்மீரில் மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

லஷ்கர் இ தொய்பா கமாண்டர் ஹைதர் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*