புதுடெல்லி,
டெல்லியில் இந்திய பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. மத்திய அரசு லாபமீட்டாத பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது. பிப்., முதல் தேதியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இத்திட்டம் முன்மொழியப்பட்டது. கொரோனா தாக்கத்தால் பாதிப்படைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் பேசுகையில்:
“பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது தொடர்ந்து நடக்கும். தொற்றுநோய் பல பகுதிகளில் உயர்ந்திருந்தாலும், பொருளாதார நடவடிக்கைகளை புதுப்பிப்பது தடையின்றி நடக்கும். அடுத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 10.5% ஆக இருக்கும் என்ற எங்கள் ஆய்வில் மாற்றம் ஏற்படாது என்றார்.