கேரளாவில் நாடு திரும்பியவர்களால் அதிகம் பரவும் கொரோனா

pinarayi vijayan

கேரளாவில் மார்ச் இறுதிக்கு பிறகு ஒரு இலக்கத்தில் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, இன்று (மே 14) ஒரே நாளில் மட்டும் 26 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் இதுவரை 560 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, அவர்களில் 64 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரையிலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்தொற்றையும், உயிரிழப்பையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கேரளாவில் இன்று ஒரே நாளில் 26 பேரிடம் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 7 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பியவர்கள்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தவிர பிற அரபு நாடுகளிலிருந்து இந்தியா அனுப்பப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யவில்லை. சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திருப்பி அழைத்து வரும் போது, கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பின்பே அவர்களை அழைத்து வர வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் பேராபத்து ஏற்பட்டு விடும் என குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன் “இது மாநிலத்திற்கு ஒரு முக்கியமான கட்டம். கடந்த சில நாட்களில், இங்கு வைரஸ் தொற்று ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருந்தது, சில நாட்கள் அதுவும் இல்லை. திடீரென வேகமெடுத்திருப்பது மறைந்துள்ள அச்சத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே கடுமையான நெறிமுறையை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு பாஸ் வழங்குமாறு நாங்கள் வற்புறுத்தியபோது பலர் எங்களை கேள்வி எழுப்பினர். அரசியல் செய்யும் நேரம் இல்லை. இதிலிருந்து மீண்டு வருவோம் என உறுதியாக கூறுகிறேன்.” என்றார்.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*