TASMAC REOPEN: மதுக்கடைகள் நாளை எங்கெல்லாம் திறப்பு: டாஸ்மாக் அறிவிப்பு

tasmac shop

அரசு மதுக்கடைகள் நாளை எங்கெல்லாம் திறக்கப்படும், எங்கெல்லாம் திறக்கப்படாது என்பதை டாஸ்மாக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் மே 7ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மே 8ம் தேதி மாலையுடன் மூடப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் ஒரு வாரத்திற்கு பிறகு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததின் மூலம் நாளை முதல் திறக்கப்பட உள்ளன.

அந்த அறிவிப்பில், உச்ச நீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து மதுபானக்கடைகள் நாளை (16.5.2020) முதல் திறக்கப்படும், பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டது. மேலும் மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் நோய் கட்டுபபாட்டு பகுதிகளிலும் இருக்கும் கடைகள் இயங்காது.

மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். கடைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*