சிஏஏ.,க்கு எதிராக அனுமதியின்றி போராடுபவர்கள் கைது: ஐகோர்ட் உத்தரவு

madras high court

திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை கைது செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்ககளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் சில இடங்களில் அவ்வபோது போராட்டம் நடந்து வருகிறது. திருப்பூரில் சட்டவிரோதமாக சிஏஏ.,க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சிஏஏ.,க்கு ஆதரவாக மற்றும் எதிர்ப்பாக நடந்த போராட்டங்கள் தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, என அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி போராடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்? போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தாதது ஏன்?, என கேள்வியெழுப்பினர். பின்னர், அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய டிஜிபி மற்றும் காவல்துறையினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*