Wednesday, April 21, 2021

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மம்தா பானர்ஜி: விதவைகளுக்கு வேலை வாய்ப்பு

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணாமுல் காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 291 வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 5-ம்...

Latest Posts

உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து வாக்கு சேகரித்த தி.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சத்யநாராயணன்.

தேர்தலுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன். வேட்டி, சட்டை, விபூதி,...

வருமான வரித்துறை ஆணையத்தில் தி.மு.க., கோரிக்கை

டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை...

பிரதமர் வேண்டுகோள்: தவறாமல் ஓட்டளியுங்கள்!

புதுடில்லி: பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் : இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய...

பா.ஜ.க., தேர்தல் அறிக்கை: புதுச்சேரியில் பெண்களுக்கு கல்வி இலவசம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்....

ஒரத்தநாட்டில் பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்

தஞ்சை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரத்தநாட்டில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து பேசியதாவது:-

தஞ்சை கோட்டையில் கருணாநிதி கால்படாத இடமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட கருணாநிதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்டா விவசாயிகளுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார் என்று பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்கள் நாக்கு அழுகிப் போய் விடும். யாரைப் பார்த்து அவ்வாறு பேசுகிறீர்கள்?.

காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்து 50 ஆண்டு காலம் காப்பாற்றியவர் கருணாநிதி. அந்த உரிமையை இப்போது மத்திய அரசின் ஜல்சக்தித்துறையிடம் அடமானம் வைத்திருக்கும் துரோகிதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவர் கருணாநிதியை பார்த்து துரோகம் செய்துவிட்டார் என்று பேசுகிறார்.
கருணாநிதி அடிக்கடி சொல்வார். நான் பிறந்த ஆண்டு 1924-ம் ஆண்டுதான் காவிரி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. 1968-ம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது, முதல்-அமைச்சராக இருந்த போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதெல்லாம் காவிரி உரிமைக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பது வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.
காவிரி நடுவர் மன்றம் அமைக்க 1970-ல் இருந்து போராடி 1990-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர்தான் நம்முடைய தலைவர் கருணாநிதி. அந்த நடுவர் மன்றத்திற்கு இடைக்கால தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றுத் தந்தவர். 2007-ல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பெற்றுத் தந்தவரும் கருணாநிதி தான்.
கவலைப்படவில்லை

மேகதாது அணை கட்ட வேண்டும் என கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிரதமரைச் சந்தித்து போர்க்கொடி தூக்கினார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு என்ன ஆபத்து என்பதை பற்றி கொஞ்சம் கூட இங்கிருக்கும் ஆட்சி கவலைப்படவில்லை.
கருணாநிதி பிறந்த மண் இந்த மண். கருணாநிதி மறைந்து நம்மையெல்லாம் விட்டு பிரிந்து அண்ணாவின் பக்கத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். நாம் பெறும் வெற்றியை அவருடைய நினைவிடத்துக்கு சென்று வெற்றி மாலையாக சூட்ட வேண்டும். அதுதான் நாம் அவருக்கு செய்யும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும்.
எனவே காவிரிக் கரையில் பிறந்து, காவேரி மருத்துவமனையில் உயிர் பிரிகிற வரையில் காவிரி உரிமைக்காக போராடிய தலைவர் கருணாநிதி. தயவுசெய்து இப்படி எல்லாம் எடப்பாடி பழனிசாமி பேச கூடாது. அப்படி பேசினால் அவருடைய நாக்கு அழுகித்தான் போகும்.

சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைக்கப்படும், பால் விலை லிட்டருக்கு 3 குறைக்கப்படும். மாணவர்கள் மற்றும் இளைஞர் நலன் அடிப்படையாக வைத்து அவர்கள் பெற்ற கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு சங்கங்களில் உண்மையான விவசாயிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அத்தனை பேரும் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்ற உறுதிமொழிகள் எல்லாம் இங்கே வழங்கப்பட்டிருக்கிறது.
சுயமரியாதையை காப்பாற்றுவதற்கான தேர்தல்
இந்த தேர்தல், ஏதோ நாம் ஆட்சிக்கு வருவதற்காக நடக்கும் தேர்தல் அல்ல. இது நம்முடைய சுய மரியாதையை காப்பாற்றுவதற்காக நடக்கும் தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள். உதயசூரியன் சின்னத்திலும் – நம்முடைய கூட்டணி கட்சிகளின் சின்னங்களிலும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தேடித்தர வேண்டும். அதற்கு உங்களது வாக்குகளை எல்லாம் மறந்து விடாமல் சிந்தாமல் சிதறாமல் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு அளித்து ஆதரவு தரவேண்டும்.
எனவே அந்த வெற்றியை பெற்றுத்தருவதற்கு நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Latest Posts

உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து வாக்கு சேகரித்த தி.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சத்யநாராயணன்.

தேர்தலுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன். வேட்டி, சட்டை, விபூதி,...

வருமான வரித்துறை ஆணையத்தில் தி.மு.க., கோரிக்கை

டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை...

பிரதமர் வேண்டுகோள்: தவறாமல் ஓட்டளியுங்கள்!

புதுடில்லி: பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் : இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய...

பா.ஜ.க., தேர்தல் அறிக்கை: புதுச்சேரியில் பெண்களுக்கு கல்வி இலவசம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்....

Don't Miss

ஆஸ்கர் விருது வழங்கும் விழா : வரும் 25ம் தேதி பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குகிறார்

லாஸ்ஏஞ்சலஸ்2021-ம் ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர். வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.93வது...

13 நாடுகள் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதிப்பு

பிரிட்டன்: அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு 13 நாடுகள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க், நார்வே, ஆஸ்திரியா, இத்தாலி, பல்கேரியா, ருமேனியாவும் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி...

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கதிர்காமம் பகுதிக்கு காரில் வந்த ரங்கசாமியை முற்றுகையிட்டு தொண்டர்கள், நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். என்.ஆர்.காங்....

வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் தர வேண்டும்: சரத்குமார்

சென்னை: வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் தர வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் வேட்புமனு தாக்கல்...

தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, நீட் தேர்வு ரத்து, ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம்!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 25 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் 13 ஆம் தேதி இரவு வெளியானது. இந்நிலையில் சட்டமன்ற...