பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை பாண்டி பஜாரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 70 அடி நீளத்திற்கு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி சார்பில் செய்யப்பட்டிருந்த அந்த கேக்கை மாநில தலைவர் L. முருகன் கேக்கை வெட்டினார்.

L. முருகன் நிகழ்ச்சிக்கு ஊர்வலமாக வந்த போது மகளிர் அணியினர் உற்சாகமாக நடனம் ஆடினார்.
பெரியாரின் பிறந்த நாளுக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று L. முருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு சமூக நீதிக்காக போராடியவர் பெரியார், அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறுவதில் தயக்கம் ஏதும் இல்லை தெரிவித்தார்.