தன்னை எதிர்த்தவரின் விருப்பத்தை நிறைவேற்றிய மோடி!.

-K.vijay Anandh

சமூக சீர்திருத்தக்கருத்துக்களைப் படத்துக்குப் படம் விதைத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் / தயாரிப்பாளர் / நடிகர் சமுத்திரக்கனி, இன்றைக்கு வெளிப்படையாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேராதவராக இருந்தாலும், நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இன்னாரை ஆதரித்து என்பதை விட மத்தியில் மீண்டும்  மோடி வந்துவிடக்கூடாது என்பதாக இவரது பிரச்சாரம் இருந்தது என்றால் அது மிகையல்ல.

அப்படிப்பட்ட சமுத்திரக்கனியின் கனவை, நனவாக்கி,  30 வருடங்களுக்கு முன் கல்லூரி படிக்கும் போது கவிதை வடிவில் வெளிப்படுத்திய அவரது கோபத்திற்கான தீர்வை, இன்று மோடி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டபிரிவின் மீதும் அதனை செயல்படுத்திய நேரு, அவரைப் பிரதமராக்கிய காந்தி ஆகியோர் மீதும்  பெருங்கோபம் கொண்டு, கடுமையான வார்த்தைகளால் திட்டி கவிதை எழுதியிருக்கிறார். அந்த சூழ்நிலையில், மேடையில்  அதனை அப்படியே வாசிக்க இயலாது என்பதைப் புரிந்துகொண்ட அவரது பேராசிரியர் முத்துகிருஷ்னன், இந்தக்கவிதையை அப்படியே நேர்மறையாக எழுதிக் கொண்டுவா என்று கூற சமுத்திரக்கனியும் மாற்றி எழுதி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். இந்தச் செய்தியினை பேராசியர் முத்துகிருஷ்ணனே அடுத்த சாட்டை பட இசைவெளியீட்டு மேடையில் தெரிவித்தார்.

இன்றைய தேதியில், அவருக்கு நண்பர்களாக இருக்கும் பெரும்பாலானோர் இடது சாரி அரசியல்வாதிகளும் முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் தான். அவர்கள் அனைவரும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பிரதேசங்களின் உண்மை நிலவரம் தெரியாமலும் அல்லது தங்களது சிறுபான்மை இனப்பாதுகாவலன் என்கிற முகமூடி கிழிந்து ஓட்டரசியல் செய்யமுடியாதோ என்கிற பயத்திலும் மோடி மற்றும் அமித் ஷா கூட்டணியின் முடிவைத் தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள் அல்லது எதிர்ப்பது போல நடிக்கிறார்கள். எப்படிப்பார்த்தாலும்,  எஸ்டேட், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் என்று முதலீடு செய்யப்போவது அவர்கள் தான் என்பதைத் தமிழக மக்கள் நன்கு உணரத்தொடங்கிவிட்டனர் என்றால் அது மிகையாகாது. 

நிகழ்ச்சியின் இறுதியில் 370 இன் மீதும் காந்தி & நேரு மீதும் அவர் எழுதிய அந்தக் கோபக்கவிதையைப்பற்றி கேட்டபோது, ஐயோ நான் என்ன எழுதினேன் என்றே மறந்துவிட்டேன் என்று தர்மசங்கடப்புன்னகை உதிர்த்தார்  சமுத்திரக்கனி.

இந்தகோபம் உங்களுக்கு மட்டுமல்ல சமுத்திரக்கனி, இந்தியர்களின் ஒவ்வொருக்குள்ளும் இருந்ததே, குறைந்த எண்ணிக்கையிலான சந்தர்ப்பவாதிகளைத் தவிர!

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*