Monday, August 10, 2020

ஐ.எஸ்.ஐ.எஸ். பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் கேரளா, கர்நாடகாவில் தஞ்சம் – ஐ.நா. பகீர் அறிக்கை.

அல் கொய்தா இந்திய துணைக்கண்டம் பயங்கரவாத அமைப்பு (AQIS) இந்தியாவில் தனது பயங்கரவாத தாக்குதலை நடத்த  ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய “ஹிந்த் விலாயத்” அமைப்பை சேர்ந்த 180 முதல் 200...

Latest Posts

கோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்

நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...

சென்னை கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து: எச்சரிக்கும் ராமதாஸ்

சென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள கிடங்கில் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேடை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்...

ஸ்ரீ ராமர் கோவிலின் மாதிரி அமைப்பு படங்களை இங்கே பார்க்கலாம்.

ஸ்ரீ ராமன் கோவில் மொத்தம் இரண்டு தளங்கள். 270 அடி நீளம், 140 அடி அகலம், 128 அடி உயரம். உள்ளே செல்ல பிரமாண்டமான ஐந்து வாசல்கள். கோயில் முழுக்க...

மதுரையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு – CCTV காட்சிகள்

மதுரையில் பட்டப்பகலில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சைக்கிளில் வரும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்த மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்...

ஓம் சக்தி வழிபாடா ? ரோம் சக்தி வழிபாடா?

இந்து மக்கள் கட்சி ராம ரவிக்குமார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்
அவர்களுக்கு வேண்டுகோள்

தெய்வீக தமிழகத்தில் செவ்வாடை அணிந்து ஓம் சக்தி பராசக்தி என்று அம்பாளுடைய திருப்பெயரை அகிலமெல்லாம் ஒலிக்கச் செய்த போற்றுதலுக்குரிய
1.பங்காரு அடிகளார் ஐயா அவர்களுக்கும்

இளையவர் போற்றுதலுக்குரிய 2.அன்பழகனார் ஐயா அவர்களுக்கும்

போற்றுதலுக்குரிய
3.செந்தில்குமார்
ஐயா அவர்களுக்கும் தங்கள் மீதும் தங்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் மீதும் லட்சக்கணக்கான ஓம்சக்தி பக்தர்கள் மீதும் மிகுந்த மதிப்பு மரியாதை வைத்திருக்கக்கூடிய ஒரு எளியவனுடைய மன வேதனையை வெளிப்படுத்தவே இந்த கடிதம்

தமிழகம் முழுக்க இருக்கக்கூடிய ஏழை எளிய அடித்தட்டு மக்கள் அனைவரையும் ஓம் சக்தி பராசக்தி என்று முடங்கச் செய்து வழிபாட்டு முறையின் மூலமாக ஒரு ஆன்மீக சக்தியை கட்டமைத்த தங்கள் அனைவருடைய திருப்பாதங்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து சமயம் அனைத்து மத வழிபாட்டு முறைகளையும் மதிக்கக்கூடிய ஒன்று.

பிற மத நம்பிக்கையாளர்களையோ வழிபாட்டு முறைகளையோ நிந்தனை செய்து என்றுமே நாம் நடந்து கொண்டது கிடையாது.

இயேசுவின் மீது பக்தி கொண்டு, மரியாள் மீது பக்தி கொண்டு, இருக்கக்கூடிய கிறிஸ்தவர்கள் அவர்கள் மத சுதந்திரத்தோடு இந்த மண்ணிலே வழிபாடு செய்யலாம் ;வாழ்க்கை நடத்தலாம்.

அதேபோல இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் இஸ்லாமியர்கள் அவர்கள் இறைவனை வணங்குவதற்கும் அவர்கள் மதத்தை பின்பற்றுவதற்கும் இந்த மண்ணில் சுதந்திரம் இருக்கிறது.

நாமும் அவர்களுக்கு எதிராக இல்லை.

இஸ்லாமியர்களை போலவும் கிறிஸ்தவர்களை போலவும் அவர்கள் பின்பற்றுவது போல் மதவழிபாட்டில் இந்துக்களும் உறுதியான பக்தி நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதுதான் என்னை போன்ற எளியவனுடைய வேண்டுகோள்.

அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும் என்று அரசியல் நடத்தக்கூடிய அரசியல்வாதிகளைப் போல ஆன்மீகவாதிகள் என்றுமே மாறக்கூடாது.

இப்படி சொல்வதால் ஒரு மதவெறி பார்வையோடு இவன் பேசுகிறான்
என்று தவறாக எண்ண வேண்டாம் .

ஒரு இஸ்லாமியர் தன்னுடைய கடவுளை வணங்குகிறார் .
அந்த மதத்தின் மீதும் , அவர் கடவுளின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையான பிடிப்போடு இருக்கிறார்.

அதேபோல கிருத்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் அவர்கள் மதத்தின் மீதும், அவர்கள் வணங்கக்கூடிய தெய்வத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையான பிடிப்போடு இருக்கிறார்.

இந்து சமயத்தை பின்பற்றக்கூடிய நாம் அன்னை மேரி , இயேசு பிரான் இந்து தெய்வங்களை சாத்தான்கள் பேய் பிசாசுகள் என்று இவர்களை வணங்குபவர்கள் பாவிகள் என்று என்றுமே நாம் கூறியது கிடையாது.

அதேபோல ஒரு இறை – ஒரு மறை என்கின்ற கொள்கையோடும் இஸ்லாம் இனிய மார்க்கம்- என்று கூறி இஸ்லாம் அல்லாதவர்கள் இஸ்லாத்தை ஏற்காதவர்கள் காபிர்கள் இன்று என்றுமே நாம் கூறியது கிடையாது.

அப்படி இருக்கையில் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து மேல்மருவத்தூரில் அருளாசி செய்து கொண்டிருக்கக் கூடிய ஓம் சக்தி பராசக்தி அம்பாள் கிறிஸ்துமஸ் விழா வந்தாள் கையில் குழந்தையோடு மரியாள் போல காட்சி அளிப்பது என்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது மட்டுமல்ல கண்டனத்திற்கு உரியதாகும்.

காரணம் பரந்த மனம் பட்ட இந்துக்கள் “சர்வ அலங்கார ரூபினி ” என்று போற்றி துதிப்பது போல,
கையில் குழந்தையோடு காட்சிதரும்
ஓம் சக்தித்தாயை , மாரியம்மனை இன்றைய “மேரி அலங்கார நாயகியே ” வணங்கிச் சென்று விடுவார்கள்.

ஆனால் இது ஏற்புடையதாக எங்களுக்கு தெரியவில்லை.

காரணம் இயேசுவின் பிறப்புக்கு அன்னை மரியாளைப் போல அலங்காரம் செய்த தங்களிடம் இந்த அடியவன் ஒரே ஒரு கேள்வியை முன் வைக்கின்றேன்.

ஆடி மாதம் அம்மன் மாதம் அம்மன் கோயில்கள் எல்லாம் கஞ்சி கலயம் சுமந்து கூழ் ஊற்றக்கூடிய திருவிழா மாதம்.

அந்த ஆடி மாதம் தமிழகத்தில் ஏதாவது ஒரு கிறிஸ்தவ திருச்சபையில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மேரி அம்மன் அதாவது அன்னை மரியாள் மாரியம்மன் அலங்காரத்தில் காண முடியுமா?

ஏதாவது திருச்சபையில் ஆடி மாதத்திலே கஞ்சிக்கலய ஊர்வலம் செல்வார்களா ?

சர்ச்சின் முன்பு ஆடி மாதம் கூழ் ஊற்றுவார்களா? என்பதை தாங்கள் கருணையோடு சிந்தனை செய்யுங்கள்.

பாதயாத்திரையாக மாலையணிந்து கிறிஸ்தவர்கள் மேரி அம்மனை அலங்கார திருத்தேர் பவனி செய்து வேளாங்கண்ணிக்கு தான் செல்கிறார்களே தவிர, மேல்மருவத்தூருக்கு எந்த கிறிஸ்தவரும் வருவது கிடையாது.

அதேபோல இஸ்லாமியர்களுடைய நோன்பு கஞ்சி ரம்ஜான் நோன்பு திறப்பு சமயத்தில் அரசியல்வாதிகளைப் போல குல்லா அணிந்து நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தி இஸ்லாமியர்களை தாஜா செய்ய வேண்டும் என்கின்ற அவசியம் தங்களைப் போன்ற மிகப்பெரிய ஆன்மீகவாதிகளுக்கு என்ன வந்தது ?ஏன் வந்தது ?என்பது எனக்கு புரியவில்லை.

அரசியல்வாதிகளுக்கு இஸ்லாமிய வாக்கு தேவை ஆன்மிகவாதியான உங்களுக்கு தேவையா? என்பதை தயவுகூர்ந்து கருணையோடு சிந்தியுங்கள் .

ரம்ஜான் நோன்பு கஞ்சி குடிக்க கூடிய தங்களைப் போல எத்தனை மசூதிகளில் ஆடி மாதம் கூழ் ஊற்றி அம்மன் பாடல்களை பாடி வழிபாடு செய்கிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டாமா?

மாரியாத்தா கோயில் எல்லாம்
மேரி ஆத்தா கோயிலானால்
தாய் மதமான இந்து சமயம் உயிர் செத்து விடும் .

நம் தாய் மண்ணும் நம்மை விட்டு பறிபோய்விடும்.

ஆன்மீகவாதிகள் ஆன்மீகவாதி வேலையை பார்க்கட்டும்.

அரசியல்வாதிகள் அரசியலில் வேலை பார்க்கட்டும்.

அதை விட்டுவிட்டு அரசியல்வாதிகளைப் போல ஆன்மீகவாதிகள் மாறினால் அப்பாவி மக்களுடைய கதி அதோ கதிதான் மாறிவிடும்.

நெற்றியில் குங்குமம் திருநீறு ஏதுமில்லாமல் நித்தமும் சுற்றித்திரிந்து மதப் பிரச்சாரம் செய்யும் பெந்தகொஸ்தே கிறிஸ்தவர்கள் அழைத்துவந்து ஓம்சக்தி மன்றத்தில் ஒரு நாள் ஓம் சக்தி பராசக்தி என்று சொல்ல வைத்து விடுங்கள் அவர்களின் நெற்றியில் குங்குமம் இட்டு விடுங்கள் அப்போது இந்த மரியாள் அலங்கார பராசக்தியை நான் ஏற்றுக் கொள்கிறேன்

5 வேளை தொழுகை நடத்தக் கூடிய அல்லாஹ்வைப் போற்றி வணங்கக்கூடிய இஸ்லாமிய அழைத்துவந்து ஒரு நாள் ஓம் சக்தி பராசக்தி மருவத்தூர் அரசியே இஸ்லாமியர்களை காத்திட அவர்கள் நெற்றியில் குங்குமம் வைத்து வழிபாடு செய்து விடுங்கள் உங்கள் நோன்புக்கஞ்சி அரசியலை நான் ஏற்றுக் கொள்கிறேன்

அதை விட்டுவிட்டு மற்றவர்களைப் போல ஆதிபராசக்தி சித்தர் பீடம்
“ஆன்மிக வழிபாட்டு சிதைப்பை ” செய்யக்கூடாது.

அப்படி செய்தால் வழிபாட்டில் இந்துக்களாக வாழ்க்கைமுறை கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு
ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் ஒரு காரணமாக மாறிவிடும் என்கின்ற மனவேதனையோடு இந்த வேண்டுகோள் கடிதத்தை தங்களுடைய திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

ஓம் சக்தி பராசக்தி

அன்புடன்
இராம. இரவிக்குமார்
மாநில பொதுசெயலாளர்
இந்து மக்கள் கட்சி – தமிழகம்

Latest Posts

கோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்

நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...

சென்னை கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து: எச்சரிக்கும் ராமதாஸ்

சென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள கிடங்கில் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேடை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்...

ஸ்ரீ ராமர் கோவிலின் மாதிரி அமைப்பு படங்களை இங்கே பார்க்கலாம்.

ஸ்ரீ ராமன் கோவில் மொத்தம் இரண்டு தளங்கள். 270 அடி நீளம், 140 அடி அகலம், 128 அடி உயரம். உள்ளே செல்ல பிரமாண்டமான ஐந்து வாசல்கள். கோயில் முழுக்க...

மதுரையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு – CCTV காட்சிகள்

மதுரையில் பட்டப்பகலில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சைக்கிளில் வரும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்த மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்...

Don't Miss

பின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...

முசிறி அருகே கண்டெடுக்கப்பட்ட பழமைவாய்ந்த பீரங்கி குண்டு!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மண்பறை என்ற கிராமத்தில், மிகப்பழமை வாய்ந்த பீரங்கி குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 7 கிலோ எடை கொண்ட கல்லாலான உருண்டை...

scooty-யில் வந்து Royal Enfield புல்லட்டை ஆட்டைய போட்ட பலே திருடர்கள்!

source: Polimer News சென்னை வேளச்சேரியில் புதிய ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி...

பற்றி எரிந்த தீ – இரு குழந்தைகளை வெளியே தள்ளிவிட்டு காப்பாற்றிய தாய்

பிரான்ஸ் நாட்டில் தீப்பிடித்த 40 அடி உயர வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட இரு குழந்தைகளையும் அக்கம்பக்கத்தினர் காயமின்றி காப்பாற்றினர் கிரனோபிள் எனும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில்...

துப்பாக்கியிலிருந்து குண்டுமழை பொழியாமல் பூமழையா பொழியும்?: அன்றைய முதல்வர் கருணாநிதி

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. எஸ். இன்பதுரை 1970-ஆம் மின்கட்டண உயர்வு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 3 பேர்சுடப்பட்டு இறந்ததற்கு அன்றைய முதல்வர் கருணாநிதி கொடுத்த விளக்கம்...