நைஜீரியாவிற்கு மூன்று JF-17 விமானங்களை விற்க உள்ள பாகிஸ்தான்
184.3 மில்லியன் டாலருக்கு நைஜீரிய நாட்டிற்கு மூன்று JF-17 விமானங்களை பாகிஸ்தான் விற்க உள்ளது.JF-17 ஒரு இலகுரக ஒற்றை என்ஜின் கொண்ட பலபணி போர்விமானம் ஆகும்.
கிடைத்த தகவல்படி, பாகிஸ்தானின் பொருளாதார ஒருங்கிணைந்த கமிட்டி மூன்று விமானங்களை விற்க அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
JF-17 விமானம் பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து தயாரித்த விமானம் ஆகும்.பாகிஸ்தானின் ஏரோநாட்டிக்கல் காம்ளக்ஸ் மற்றும் சீனாவின் செங்டு ஏர்கிராப்ட் கார்பரேசன் இந்த விமானத்தை மேம்படுத்தி தயாரித்து வருகின்றன.
இந்த விமானத்தை விட அதிகமான திறன்களை கொண்ட தேஜஸ் போர் விமானம் இந்தியாவின் சொந்த தயாரிப்பு. ஆனால் இந்திய விமானப்படையின் தேவையான 120 விமானங்களை தயாரிக்கவே HAL (Hindustan Aeronautics Limited ) திணறிக்கொண்டு இருக்கிறது. இந்த விமானத்தை தயாரிக்கும் வேகத்தை அதிகப்படுத்தினால் , பல நாடுகள் இந்த விமானத்தை வாங்க வாய்ப்பிருக்கிறது. செய்யுமா HAL?