பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகின : ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் “பேட்ட” மற்றும் “விஸ்வாசம்” திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்த பேட்ட திரைப்படம் உலகத்தில் பல்வேறு இடங்களில் வெளியாகி உள்ளது.

பேட்ட ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை மற்றும் புறநகரில் உள்ள பல திரையரங்குகளில் அதிகாலை நான்கு மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.

இந்தநிலையில் பேட்ட திரைப்படம் வெளியானதை பேனர், கட்வுட் வைத்தும் பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் கொண்டாடினர்.

விஸ்வாசம் ரசிகர்கள் உற்சாகம்

உலகம் முழுவதும் நடிகர் அஜித்குமாரின் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகி உள்ளது.

ஒன்றரை வருடத்திற்க்கு பிறகு தல அஜித்தின் படம் திரைக்கு வந்திருப்பதால் அவரது ரசிகர்கள் எல்லையற்ற ஆரவாரம்.

பிரம்மாண்ட பேனர்கள், கட் அவுட்கள் வைத்தும் பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் கொண்டாட்டம்.

விஸ்வாசம் வெளியான இன்றைய தினம் தான் தங்களுக்கு பொங்கல் பண்டிகை என்றும் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*