வங்கத்தை புரட்டிப்போட்ட அம்பான் புயல்: 1000 கோடி நிதி ஒதுக்கிய பிரதமர் மோடி

modi and mamata banerjee

மேற்கு வங்கத்தில் அம்பான் புயல் பாதித்த பகுதிகளை பாரத பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் மம்தா இருவரும் ஹெலிகாப்டரில் பார்வையிட்டார். மேற்குவங்க புயல் பாதிப்புக்கு நிவாரணமாக 1000 கோடி நிதி வழங்கப்படும் என அறிவிப்பு.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, 17ம் தேதி தீவிர புயலாக மாறியதோடு, வடக்கு மற்றும் – வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து, மேற்கு வங்கத்தின் திஹா மற்றும் வங்கதேசத்தின், ஹத்தியா தீவுகளுக்கு இடையே, நேற்று முன்தினம் மாலை கரையை கடந்தது.

Amphan

சுமார் 4 மணி நேரம் கரையை கடக்க துவங்கிய அம்பான் புயலால் மின்சார கம்பங்கள், பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த புயலினால் 72- க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1 லட்சம் கோடி சேதம் அடைந்துள்ளதாக மாநில முதல்வர் மம்தா அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க புயலுக்கு 1000 கோடி நிதி வழங்கப்படும். உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிதி வழங்கப்படும். மேற்கு வங்க மக்கள் துயரத்தை சந்தித்துள்ள இந்நேரத்தில் துணை நிற்போம். மேற்குவங்கத்தில் மின்சாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

புயலால் அடைந்த சேதத்தை சீரமைக்க மத்திய அரசு முழு உதவி செய்யும். மே.வங்கம், ஒடிசா புயலில் பலியானவர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் மக்களோடு மத்திய அரசு நிற்கும். இவ்வாறு மோடி கூறினார்.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*