புதுடில்லி:
பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் :
இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய நாளாகும். அனைவரும் தவறாமல் தங்களில் ஓட்டை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் ஓட்டளிப்பதன் அவசியத்தை புரிந்து ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டும். பெருவாரியான ஓட்டுப்பதிவுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளிலும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு துவங்கியது. அசாம் மாநிலத்தின் 47 தொகுதிகளில் 11,500க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப் பதிவு துவங்கியது.