Saturday, August 15, 2020

சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? விரக்தியில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளிக்கப்பட்ட புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னையில் சிக்னல் கம்பம் : வாகன ஓட்டிகள் வரவேற்பு!!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சென்னை காமராஜர் சாலையில் சோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது சென்னை போக்குவரத்து துறை. தமிழகத்தின் தலைநகரான...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

உயிரையும், பணத்தையும் சேர்த்து பறிக்கும் “பப்ஜி” ஒரு தீய விளையாட்டு

நன்றி: தினமலர்

கொஞ்ச காலத்துக்கு முன்பு, ‘புளூவேல்’ என்ற சாகச விளையாட்டு இணையதளத்தில் பரவலானது. அந்த விளையாட்டுக்கு அடிமையான பலர், சாகசம் என்ற பெயரில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டது செய்தியான பிறகு அந்த விளையாட்டு, தடை செய்யப்பட்டது.

தற்போது “பப்ஜி” விளையாட்டு, இணையத்தில் பிரபலமாகி வருகிறது. சிறுவர்கள் முதல் வாலிபர்கள் வரை ஏராளமானோர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வருகின்றனர். விளையாடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. இலவசம். யார் வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற வசீகர அழைப்பில் உள்ளே நுழைபவர்கள், படிப்படியாக விளையாட்டின் அடுத்ததடுத்த கட்டங்களுக்கு முன்னேறவும், தங்களுக்கு கூடுதல் சக்தி கொண்ட ஆயுதங்கள், வாகனங்கள், ஆடைகள் வாங்குவதற்கென செலவழிக்கத் தொடங்குகின்றனர்.

இப்படி நுழைந்தவர்களில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறுவன் அவர்களின் பெற்றோர் வங்கிக் கணக்கில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் ஒரே மாதத்தில் 16 லட்சம் ரூபாயை செலவழித்திருக்கிறான். இது நடந்த ஒரு மாதத்துக்குள் ஆந்திராவை சேர்ந்த 14 வயது சிறுவன், 20 நாளில் 5.4 லட்சம் ரூபாயை அவனது அம்மாவின் வங்கிக் கணக்கில் இருந்து செலவழித்திருக்கிறான்.

நம்மிடம் பாரம்பரிய விளையாட்டுகள், விதவிதமாக இருக்கின்றன. சாகசம் நிறைந்ததாக மட்டுமின்றி, தன்னம்பிக்கை, குழு மனப்பான்மை, முடிவெடுக்கும் திறன், உடல் ஆற்றல் ஆகியவற்றை வளர்ப்பதாக நம்முடைய விளையாட்டுகள் உள்ளன.
ஆனால், இப்போது இளைஞர்களை ஆக்கிரமித்திருக்கும் ஆன்லைன் விளையாட்டுகள் பலவும், அடுத்தவர் பணத்தை எடுத்து செலவழிக்க தயங்காத திருட்டுத்தனத்தையும், அவசியமில்லாமல் செலவழிக்கும் ஊதாரித்தனத்தையும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் வளர்க்கின்றன.

இந்த ஆன்லைன் விளையாட்டுக்கள், அவர்களை பெற்றோர், நண்பர்களிடம் இருந்து பிரித்து, எந்த நேரமும் கம்ப்யூட்டர், செல்போனே கதியாக கிடக்கும் அளவுக்கு தனிமைப்படுத்துவதோடு, உளவியல்ரீதியாகவும் அவர்களை மனநோயாளிகளாக்குகின்றன.

ஒருபக்கம், பெற்றோரின் சேமிப்புகள் கரைகின்றன. இன்னொரு பக்கம், இளம் தலைமுறையினர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலவீனமானவர்களாக, கற்பனையில் இன்பம் துய்த்து திருப்தியடையும் மட்டமான ரசனைக்குரியவர்களாகவும் வளர்கிறார்கள். இது தனிப்பட்டவருக்கு மட்டுமல்ல, அவர் தொடர்புடைய சமூகத்துக்கும் கேடானது.

புளூவேல் போல பலர் உயிர் பறிபோன பிறகுதான் விழித்துக் கொண்டு நடவடிக்கை என்றில்லாமல், விபரீதங்கள் பெரிதாவதற்கு முன்பாகவே மத்திய அரசு விழித்தெழ வேண்டும்.
அன்னிய விஷயம், நம் நாட்டுக்குள் அறிமுகமாவதற்கு முன்பே, அது நம்மவர்களுக்கு நல்லதா, பண்பாட்டுக்கு உகந்ததா என்பதை ஆராய்ந்து அனுமதிக்கும் அளவுக்கு இணையதள தொழில்நுட்ப சட்டதிட்டங்களில் நாம் கவனம் செலுத்துவது அவசியம்.

இப்போதைக்கு அவசரமும்கூட.

Latest Posts

ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னையில் சிக்னல் கம்பம் : வாகன ஓட்டிகள் வரவேற்பு!!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சென்னை காமராஜர் சாலையில் சோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது சென்னை போக்குவரத்து துறை. தமிழகத்தின் தலைநகரான...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

Don't Miss

விமானத்தில் ஒலித்த தமிழ் குரல், அசத்தும் சென்னை ராயபுரம் பைலட் ப்ரியாவிக்னேஷ்..!

விமானத்தில் தகவல்களை தெளிவான தமிழில் அறிவித்த ஒரு விமானி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார் நமது ராயபுரத்தை சேர்ந்த ப்ரியாவிக்னேஷ். சென்னையில்...

வறுமையின் உச்சம் தள்ளாடும் வயதிலும் தளராமல் சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது மூதாட்டி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பக் கலையை வெளிப்படுத்தி ரோட்டோரம் பிச்சையெடுப்பது காண்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது. கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம்...

ரூ.100 லஞ்சம் தரமறுத்த சிறுவன் முட்டை வண்டியைத் கவிழ்த்துவிட்டு அதிகாரிகள் அட்டூழியம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், லஞ்சம் கொடுக்காத சிறுவனின் முட்டை வைத்து இருந்த தள்ளுவண்டியை, மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்ந்ததில் அதில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து நாசமாகின.

குழந்தை கடத்த முயன்றவர் மீது ஒரு புலியை போல் பாய்ந்த தாய்…

டெல்லி ஷகர்புர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த, டிப்டாப் ஆசாமிகள் இருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

பின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...