135-வது வார்டு, பக்தவத்சலம் தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத்திடல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது, சிறுவர் சிறுமியர்கள், இளைஞர்கள் விளையாடுவதை தடுக்கும் வகையில் மைதானம் கபளிகரம் செய்யப்பட்டுவருகிறது.
தற்போது, விளையாட்டு மைதானத்திற்குள் குறுக்குச் சுவர் (காம்பவுண்டு சுவர்) அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும், இளைஞர் நலன் கருதி இப்பணியினை உடனடியாக நிறுத்த வேண்டுகிறோம். மேலும் பொதுமக்கள் வரிப்பணத்தில் அங்கு அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாடுவதற்கு நபர் ஒருவருக்கு, மாதம் ரூ.1000/ வசூல் வேட்டை, தனியாரின் மேற்பார்வையில் நடைபெறுகிறது.

இதனை மாநகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்தி உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விளையாடு மைதானம் பயன்பட எல்லா நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.