ஊட்டி: சென்னையிலிருந்து நீலகிரிக்கு சுற்றுலா சென்ற 7 பேரும் விபத்தில் சிக்கியது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை சேர்ந்த ராமஜோஸ், ரவிவர்மா, இப்ராஹிம், ஜெயக்குமார், அருண், அகர்வால், ஜூடி. இவர்கள் 7 பேரும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஊட்டிக்கு சென்றனர். ஸ்டெர்லிங் என்கிற ஸ்டார் ஓட்டலில் இவர்கள் தங்கி இருந்தனர்.
இவர்கள் தங்கள் அறையைவிட்டு மசினகுடி செல்வதாக ஹோட்டல் ஊழியர்களிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அன்று இரவு நீண்டநேரம் ஆகியும் அறைக்கு ஏழு பேரும் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகம், போலீசில் புகார் ஏதும் கொடுக்காமல் தகவலை சொல்லி இருக்கிறார்கள்.
மொபைல் சிக்னல்:
அந்த 7 பேரின் குடும்பத்தார்களும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போன் செய்து விபரம் கேட்டுள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை ஆரம்பித்தனர். மசினகுடியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாயாறு என்ற என்ற இடத்தில் மொபைல் சிக்னல் வந்தது தெரியவந்தது.
மாயாறு பள்ளத்தாக்கு
இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனவிலங்குகளால் 7 பேருக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ வனத்துறை, காவல்துறை என அனைவருமே மாயாறு பள்ளத்தாக்கில் தேடும் பணியில் விடிய விடிய ஈடுபட்டனர்.
35-வது கொண்டை ஊசி வளைவு:
ஹோட்டல் அறையைவிட்ட புறப்பட்ட இவர்கள் மசினகுடிக்கு செல்லும் 35-வது கொண்டை ஊசி வளைவில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காரில் பிரேக் பழுதடைந்ததாக தெரிகிறது. இதனால் கார் அங்கிருந்த மாயாறு பள்ளத்தாக்கை நோக்கி கீழே விழுந்துள்ளது.
மீட்பு பணியில் போலீசார்:
இதையடுத்து போலீசார் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.