உதவி ஆட்சியர் சிவகுருபிரபாகரன் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த எண்ணெய் டின்களை கொண்டு பறவைகளுக்கு உணவு அளிக்கும் வகையில் எண்ணெய் டின்களை மாற்றி வடிவமைத்துள்ளார்.
சுட்டெரிக்கும் கோடைவெயிலை எதிர்கொள்ள முடியாமல் மனிதர்கள் திணறும் வேளையில் பறவையினங்களின் நிலை கேட்கவே வேண்டாம்.
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு குடியிருப்பில் உதவி ஆட்சியர் சிவகுருபிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சிவகுரு இயற்கை மற்றும் பறவைகள் மீதும் முகுந்த ஆர்வம் கொண்டவராவார்.

பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள எண்ணெய் டின்களை கொண்டு பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் அருந்தும் வகையில் மாற்றி வடிவமைத்துள்ளார் சிவகுருபிரபாகரன்
எண்ணெய் டின்னில் பறவைக்கு தானியம் மற்றும் தண்ணீர் நிரப்பி அசத்தல் – நெல்லை சப்-கலெக்டருக்கு குவியும் பாராட்டுகள்
மாற்றி வடிவமைக்கப்பட்ட எண்ணெய் டின்னில் தானியம் மற்றும் தண்ணீர் நிரப்பி வீட்டிற்கு அருகில் இருக்கும் மரங்களில் கட்டித் தொங்கவிட்டுள்ளார். அதில் உள்ள தானியத்தை உண்பதற்கும் தண்ணீரைக் குடிப்பதற்காகவும் பறவைகளும் தினமும் வந்து போகின்றன. அவரின் இந்த முயற்சிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.