தொழிலாளர் பற்றாக்குறையினால் நவீன இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை

sugar-cane-cutter-machine

நன்றி:தினமலர்

மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பண்ணையில், சாகுபடி செய்துள்ள கரும்புகள் நவீன இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படுகிறது.

கரும்பு அறுவடை செய்யும் நவீன இயந்திரம்

மடத்துக்குளம் அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1960ல் தொடங்கப்பட்டது. ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆறு மாத காலம் கரும்பு அரவை பருவம் ஆகும்.

2019 – 20 ஆண்டுக்கான அரவைக்காக, உடுமலை, மடத்துக்குளம், பழநி, பல்லடம், தாராபுரம் மற்றும் ஆலைப்பகுதியிலுள்ள, 836 விவசாயிகளிடமிருந்து 2,335 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம், 86 ஆயிரம் டன் அரவைக்கு வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு அரவை, கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. ஒப்பந்தம் செய்யப்பட்ட கரும்பு வயல்களில் அறுவடை பணி நடக்கிறது. இதற்காக தேனி, பெரியகுளம், விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்துள்ள தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனாலும், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்தப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதனால் கரும்பு அறுவடை தாமதமாகி விவசாயிகள் பாதிக்கின்றனர். இதற்குத்தீர்வாக கரும்பு அறுவடை செய்ய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. தொடக்கமாக அமராவதி சர்க்கரை ஆலைக்கு சொந்தமான பண்ணையில் இயந்திர அறுவடை தொடங்கியுள்ளது.

நாளொன்றுக்கு, 30 டன் அறுவடை செய்யும் திறன் கொண்ட இயந்திரத்தை கரும்பு வயல்களில் இயக்கும் போது, கரும்புகளை துண்டு துண்டாக வெட்டி, இந்த இயந்திரத்துடன் இணைந்துள்ள பெட்டி போன்ற பகுதியில் சேமிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவு குவிந்த பின் இந்த கரும்புத்துண்டுகள், லாரியில் பின்பகுதியில் கொட்டப்பட்டு ஆலைக்கு எடுத்துச் சென்று அரவை செய்யப்படுகிறது.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*