Tuesday, April 20, 2021

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மம்தா பானர்ஜி: விதவைகளுக்கு வேலை வாய்ப்பு

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணாமுல் காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 291 வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 5-ம்...

Latest Posts

உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து வாக்கு சேகரித்த தி.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சத்யநாராயணன்.

தேர்தலுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன். வேட்டி, சட்டை, விபூதி,...

வருமான வரித்துறை ஆணையத்தில் தி.மு.க., கோரிக்கை

டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை...

பிரதமர் வேண்டுகோள்: தவறாமல் ஓட்டளியுங்கள்!

புதுடில்லி: பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் : இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய...

பா.ஜ.க., தேர்தல் அறிக்கை: புதுச்சேரியில் பெண்களுக்கு கல்வி இலவசம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்....

தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, நீட் தேர்வு ரத்து, ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம்!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 25 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் 13 ஆம் தேதி இரவு வெளியானது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ளார்.

தேர்தல் அறிக்கை :

* முன்னாள் பிரதமர்   ராஜிவ் காந்தி கண்ட கனவின்படி,  உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* திறமையும், வலிமையும், அர்ப்பணிப்பும் கொண்ட தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருடம் ஒன்றுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ள சிறந்த 500 இளைஞர்கள், இளம் பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் வழங்கி, 3 ஆண்டுகளுக்கு குடிமைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயிற்சி வழங்கி அவர்களை பணியில் அமர்த்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து தொழில் தொடங்க விரும்புவோருக்கு, நிலம், மின்சாரம் போன்ற தொழில் ஆதாரத் தேவைகளுக்கு விலையில் சலுகையும் கட்டணத்தில் மானியமும் வழங்கப்படும்.

* அதிமுகவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒப்பந்தக்காரர்கள் கூட்டணி அமைத்து ஒப்பந்தங்களைத் தொகுப்பதற்கு வழிவகுத்த விதிகள் மாற்றியமைக்கப்படும்.

* புதிதாக தொழில் முதலீடு செய்கிற முனைவோருக்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு.

* பணமதிப்பிழப்பு, குளறுபடியான ஜிஎஸ்டி மற்றும் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நுண் தொழில் முனைவோர், வங்கிகளில் பெற்ற கடனுக்காக 50 சதவிகிதத்தைத் தமிழக அரசு மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த தமிழக சட்டமன்ற மேலவையை நியாயமற்ற காரணங்களைக் கூறி, கடந்த காலத்தில் கலைக்கப்பட்டது. ஜனநாயகத்தில் சட்டப்பேரவையும், மேலவையும் இரு கண்களாக செயல்பட்டு வந்தன. இந்நிலையில், விவாதங்கள் செழுமை பெற மீண்டும் சட்டமன்ற மேலவையை கொண்டு வர வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

* தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களுக்குச் சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*  மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் 3 விவசாயச் சட்டங்களுக்குப் பதிலாக, தமிழகத்தில் விவசாயிகளைப் பாதுகாக்கும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்.

*  காவிரி   நீர் மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தக் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும்.

* நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 7.5 சதவிகிதம் ஒதுக்கீட்டை 10 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்

* முதியோர் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படுவதோடு, அதனை அஞ்சல் துறை மூலம் நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*  இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட திருக்கோயில்களில், இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க  நடவடிக்கை எடுக்கப்படும்.

*  முதியோர் உதவித் தொகை பெறுவோர் குடும்பத் தலைவராக இருந்தால், அவர்களது வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழகத்தில் மின் தேவையைக் கணக்கிட்டு, அதற்கு ஏற்றாற்போல் புதிய மின் திட்டங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*  சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படும்.

*  மாதம் ஒருமுறை விசைத் தறியாளர்களுக்கு மின் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* திருநங்கைகளுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்த, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்தங்கள் செய்யப்படும்.

*  பணியின்போது பாதிக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய நிவாரணமும், பணியின் போது இறக்க நேரிடும் பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து வாக்கு சேகரித்த தி.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சத்யநாராயணன்.

தேர்தலுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன். வேட்டி, சட்டை, விபூதி,...

வருமான வரித்துறை ஆணையத்தில் தி.மு.க., கோரிக்கை

டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை...

பிரதமர் வேண்டுகோள்: தவறாமல் ஓட்டளியுங்கள்!

புதுடில்லி: பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் : இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய...

பா.ஜ.க., தேர்தல் அறிக்கை: புதுச்சேரியில் பெண்களுக்கு கல்வி இலவசம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்....

Don't Miss

ஆஸ்கர் விருது வழங்கும் விழா : வரும் 25ம் தேதி பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குகிறார்

லாஸ்ஏஞ்சலஸ்2021-ம் ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர். வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.93வது...

13 நாடுகள் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதிப்பு

பிரிட்டன்: அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு 13 நாடுகள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க், நார்வே, ஆஸ்திரியா, இத்தாலி, பல்கேரியா, ருமேனியாவும் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி...

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கதிர்காமம் பகுதிக்கு காரில் வந்த ரங்கசாமியை முற்றுகையிட்டு தொண்டர்கள், நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். என்.ஆர்.காங்....

வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் தர வேண்டும்: சரத்குமார்

சென்னை: வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் தர வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் வேட்புமனு தாக்கல்...

தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, நீட் தேர்வு ரத்து, ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம்!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 25 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் 13 ஆம் தேதி இரவு வெளியானது. இந்நிலையில் சட்டமன்ற...